`காதல் திருமணம் செய்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்!’ – கோவை கிராமத்தில் ஆர்டிஓ விசாரணை

கோவை மாவட்டம், அன்னூர் அருகே வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. பொதுவாகவே  கோவை புறநகர் பகுதிகளில் இப்போதும் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

வடக்கலூர்

அப்படி வடக்கலூரில் காலம் காலமாக தொடரும் ஓர் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்புத் திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். “எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் செய்தால் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. நல்லது, கெட்டது உள்ளிட்ட குடும்ப சடங்குகளில் பங்கேற்பதற்கும் தடை  விதித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்

விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி  கோவை வடக்கு ஆர்.டி.ஓ  கோவிந்தன் அந்தப் பகுதியில் நேற்று விசாரணை நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் விசாரணையை வருகிற சனிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர். வடக்கலூர் மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இந்த முறை காலம் காலமாக தொடர்கிறது. சுந்தரம் கோயில் நிர்வாக பொறுப்பில் இருந்தார்.

காதல்

இதற்கு முன்பு இங்கு காதல் திருமணம் செய்தால், அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல், பஞ்சாயத்து செய்து பணம் வசூலிப்பது எல்லாமே சுந்தரம் செய்து கொண்டிருந்தார். அதுவே அவர் மகள் காதல் திருமணம் செய்தபோது அந்த முறையை பின்பற்றவில்லை.

ஊருக்கு ஒரு சட்டம், அவருக்கு ஒரு சட்டமாக என கேள்வி எழுப்பினோம். அந்த நேரத்தில் கோயில் வரவு, செலவு விவகாரத்திலும் பிரச்னை ஆனது. அதை மறைக்க சுந்தரம் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.” என்றனர். இதுகுறித்து சுந்தரம் கூறுகையில், “என் மகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது.

வடக்கலூர் கோயில்

ஒரே சமுதாயமாக இருந்தாலும், ஊர் முறைப்படி ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து ஊர் பஞ்சாயத்தில் அபராதம் செலுத்தினால்தான், ஊருடன் இணைத்துக் கொள்வோம் என்றார்கள். மகள் எங்கள் வீட்டுக்கு வந்தால், என் உறவினர்களையும் ஒதுக்கி வைத்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள். இது சட்டப்படி தவறு.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88