உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டம்காண வைத்தவர் ஜூலியன் அசாஞ்சே(Julian Assange). ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்த ஊடகவியலாளரான அசாஞ்சே, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர்களில் ஒருவர்.

ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ்

ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். அந்த ஆவணங்கள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதைத் தொடர்ந்து, தேடப்படும் குற்றவாளியாக ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்கா அறிவித்தது. அதனால், இங்கிலாந்தில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார். பின்னர், 2019-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவருவதற்காக ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.

ஜூலியன் அசாஞ்சே

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் அசாஞ்சே. அந்த வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இங்கிலாந்து சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவர், அமெரிக்க நீதித்துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார். அதன்படி, ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும். இந்தக் குற்றத்துக்கு 62 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால், ஏற்கெனவே இங்கிலாந்து நீதிமன்றத்தில் அவர் சிறைத்தண்டனையை அனுபவித்ததால், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்க நீதித்துறையுடனான ஒப்பந்தம்.

ஜீலியஸ் அசாஞ்சே

அவர் இளைஞரான இருந்த காலத்திலேயே கணினி தொழில்நுட்பத்தில் அசாத்திய திறமைசாலியாக இருந்தார். நாசா, பெண்டகன் உள்பட பாதுகாப்பு நிறைந்த பல அமைப்புகளின் கணினிகளுக்குள் அவர் ஊடுருவியிருக்கிறார். 1991-ம் ஆண்டு, 30-க்கும் மேற்பட்ட சைபர் க்ரைம் குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய போலீஸார் சுமததினர். அவற்றி பெரும்பாலான குற்றங்களை அசாஞ்சே ஒப்புக்கொண்டார். அந்தக் குற்றங்களுக்கு தண்டனையாக சிறிய அளவில் அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

மெல்பர்ன் பல்கலைக்கழகதில் இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்ந்த அவர், அந்தப டிப்பைப் பாதியிலேயே கைவிட்டார். பின்னர், கணனி பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். 2006-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் உருவாக்கப்பட்ட பிறகுதான், உலகமே அதிரும் வகையில் பல ஆவணங்களை அவர் வெளியிட்டார். ‘விக்கிலீக்ஸ் ஒரு விஞ்ஞானப் பூர்வமான இதழியல்’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலியன் அசாஞ்சே!

சோமாலியாவில் அரசு அதிகாரிகளைப் படுகொலை செய்ய கூலிப்படையினரை சோமாலியா தலைவர் ஒருவர் ஊக்குவித்திருக்கிறார். விக்கிலீக்ஸில் வெளியிடப்பட்ட முதல் தகவல் அதுதான். இதுபோல, பல நாட்டு அரசுகளின் ரகசியங்களை ஹேக்கிங் மூலமாகப் பெற்று, விக்கிலீக்ஸில் அவர் வெளியிட்டார். கியூபாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் குவாண்டனாமோ சிறை தொடர்பான முக்கிய விவரங்களை விக்கிலீக்ஸில் அவர் வெளியிட்டார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் அமெரிக்கா ஈடுபட்டது தொடர்பான ஆவணங்கள் விக்கிலீக்ஸில் வெளியிட்டு, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அசாஞ்சே. அதனால், அமெரிக்கா தேசத்தின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார். ஆனாலும், விக்கிலீக்ஸில் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் கசியவிடப்படுவது நின்றபாடில்லை.

அசாஞ்சேவின் திருமணப் புகைப்படம்

அமெரிக்காவின் ரகசியங்கள் நிறைந்த 250,000 ஆவணங்கள் விக்கிலீக்ஸில் கசிந்தன. குறிப்பாக, ஈரான் நாட்டை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா திரைமறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் எல்லாம் அப்போது விக்கிலீக்ஸில் கசியவிடப்பட்டன. அதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு அசாஞ்சே ஆளானார்.

52 வயதாகும் அசாஞ்சே ஏற்கெனவே இங்கிலாந்தில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டதால், அமெரிக்கா அவரை விடுதலை செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலையானவுடன், அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருக்கிறார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.