நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு புதிதாக அமைக்கப்பட்ட 18-வது மக்களவையின் முதல்நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டு எம்.பி-க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதிவியேற்றனர். அப்போது, தமிழ்நாட்டு எம்.பி-க்கள் பதவியேற்றுவிட்டு பல்வேறு முழக்கங்களை முழங்கினர். அவை ஒரே தொகுப்பாக இங்கே…
சசிகாந்த் செந்தில் – “வாழ்க வையகம், வாழ்க தமிழ், ஜெய் ஜெகத். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள். ஜெய் பீம்.”
கலாநிதி வீராசாமி – “பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகள் வாழ்க. திராவிடம் வாழ தளபதி வாழ்க. தமிழ் வெல்லும்.”
தமிழச்சி தங்கபாண்டியன் – “வாழ்க தமிழ், வளர்க முத்தமிழறிஞரின் புகழ், வாழ்க தலைவர் தளபதி, வாழ்க தமிழ் திருநாடு.”
தயாநிதி மாறன் – “வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார், வாழ்க அண்ணா, வாழ்க ஸ்டாலின், வாழ்க உதயநிதி ஸ்டாலின். வேண்டாம் நீட், நீட்டை தடை செய்யுங்கள்.”
செல்வம் – “பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தலைவர் தளபதி, வாழ்க இளம் தலைவர் உதயநிதி, வெல்க தமிழ்.”
ஜெகத்ரட்சகன் – “வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயா.”
கதிர் ஆனந்த் – “வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி, வருங்காலம் எங்கள் உதயநிதி.”
கோபிநாத் – தெலுங்கில் உறுதிமொழி ஏற்று இறுதியில், “ஜெய் தமிழ்நாடு” என்றார்.
அ.மணி – “வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, வாழ்க முத்தமிழறிஞர் கலைஞர் புகழ், வாழ்க தளபதி புகழ்.”
சி.என்.அண்ணாதுரை – “வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க தளபதியார், வாழ்க எங்களின் எதிர்காலம் அண்ணன் உதயநிதி, வாழ்க எங்கள் பொதுப்பணித்துறை அமைச்சர்.”
தரணிவேந்தன் – “வாழ்க கலைஞர், வாழ்க தமிழ், வாழ்க ஸ்டாலின், வாழ்க உதயநிதி, வாழ்க அமைச்சர் எ.வ.வேலு”
ரவிக்குமார் – “வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர், வாழ்க பெரியார், வாழ்க எழுச்சித் தமிழர், வெல்க சமத்துவம், வெல்க சமூக நீதி.”
மலையரசன் – “பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, தளபதியார் வாழ்க, வருங்கால தமிழகம் இளைஞரணி அமைப்பாளர் வாழ்க, வாழ்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், வாழ்க தமிழ்.”
செல்வகணபதி – “வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக, தளபதி வாழ்க, வருங்கால தமிழகம் உதயநிதி வாழ்க.”
மாதேஸ்வரன் – “ஓங்குக கோவைச் செழியன் புகழ், அரூர் முத்துக்கவுண்டர் புகழ், அண்ணன் ஈஸ்வரன் புகழ்”
பிரகாஷ் – “வாழ்க அண்ணன் ஸ்டாலின், வளர்க தமிழ்நாட்டின் இளம் தலைவர் அண்ணன் உதயநிதி, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.”
கே.சுப்பராயன் – “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழறிஞர், வாழிய பாரதமணி திருநாடு.”
கணபதி ராஜ்குமார் – “வாழ்க தமிழ், வாழ்க கலைஞர் புகழ், வாழ்க தலைவர் ஸ்டாலின், வாழ்க எங்கள் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின், உழைத்த தொண்டர்களுக்கும், என்னைப் பெற்ற அன்னைக்கும், என் குடும்பத்தாருக்கும் நன்றி.”
ஈஸ்வரசாமி – “பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வாழ்க தலைவர் தளபதி, எதிர்காலம் சின்னவர் வாழ்க, தமிழ் வாழ்க, தமிழ்நாடு வளர்க.”
சச்சிதானந்தம் – “தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க, விவசாயிகள், தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக.”
ஜோதிமணி – “வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வளர்க இந்தியா, ஓங்குக ஒற்றுமை.”
துரை வைகோ – “வாழ்க சமூக நீதி அரசியல், வாழ்க சமத்துவம், வாழ்க மதசார்பின்மை, பரவட்டும் மனிதநேயம்.”
அருண் நேரு – “வாழ்க தமிழ், வாழ்க திராவிடம், வளர்க இந்தியா, வாழ்க தளபதியின் புகழ்.”
தொல்.திருமாவளவன் – “ஜெய் ஜனநாயகம் , ஜெய் அரசியல் சாசனம்.”
சுதா ராமகிருஷ்ணன் – “தமிழ் மக்கள் வாழ்க, இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க, ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ.”
செல்வராஜ் – “தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க.”
முரசொலி – “வாழ்க தமிழ், பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்குக, வளர்க ஸ்டாலின், எங்களின் அடுத்த தலைவர் அண்ணன் உதயநிதி. காவிரியில் நீர் திறந்து டெல்டா விவசாயிகளைக் காப்பாற்று.”
சு.வெங்கடேசன் – “தமிழ் வாழ்க, மார்க்சியம் வெல்க.”
மாணிக்கம் தாகூர் – “இந்திய அரசியலமைப்பு வாழ்க, ஜெய்ஹிந்த்.”
நவாஸ்கனி – “வாழ்க தமிழ், வளர்க மதசார்பின்மை, வெல்க சமூக நீதி, வாழ்க ஜனநாயகம்.”
ராணி ஸ்ரீகுமார் – “வாழ்க பெரியார், கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க எங்களின் எதிர்காலம் சின்னவர், வாழ்க கவிஞர் கனிமொழி, வாழ்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், வாழ்க தமிழ்நாடு, தமிழ் வெல்லும்.”
விஜய் வசந்த் – “பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88