`மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். ‘யோகி’ மூலம் தமிழ் திரையுலகில் நடிகராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். இயக்குநரும், நடிகருமான அமீரின் மகள் அனி நிஷாவின் திருமணம் மதுரையில் இன்று விமரிசையாக நடைபெற்றது.

இயக்குநர் அமீர்

மதுரை நெல்பேட்டை பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமீர், பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி தன்னையும் சிறந்த இயக்குநராக நிலை நிறுத்திக்கொண்டவர், வடசென்னை உள்ளிட்ட சில படங்களிலும் தன் நடிப்பால் பலராலும் பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து அரசியல் கருத்துகளையும் வெளிப்படையாகப் பேசுபவர். இந்நிலையில் அவரின் மகள் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது.

கலந்துகொண்ட திரையுலகினர்

இத்திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் சேரன் , வெற்றிமாறன், சசிகுமார் , சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பிரபாகரன், சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா , பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.