ஆண் குழந்தையை எதிர்பார்த்து வரிசையாக பெண் குழந்தைகள் பெற்றவர்கள் உண்டு. ஆனால், இப்போது பெண் குழந்தையை எதிர்பார்த்து வரிசையாக ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான யலன்சியா ரொசாரியோ தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 9 முறை கர்ப்பமாகி 9 ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளார். 10-வது முறை கர்ப்பமான போதே இவருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.
இப்போது பெண் குழந்தை பிறந்து விட்டாலும் கர்ப்பமாவதை இவர் நிறுத்தவில்லை. தற்போது தன் மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என 11-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
யலன்சியா தனது 18-வது வயதில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவரின் மூத்த மகனுக்கு இப்போது 13 வயதாகிறது. இந்தச் சிறுவன் தற்போது சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சராக இருக்கிறார்.
இவருக்கு பெரிய குடும்பம் வேண்டும் என்று ஆசை. அதனால் தொடர்ச்சியாக குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். அதோடு தங்களுடைய குழந்தைகளை வைத்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.