Pink Auto, பாதைத் திட்டம் `முதல்’ உணவூட்டு மானியம், மகளிர் விடுதிகள் வரை – பேரவை அறிவிப்பு ஹைலைட்ஸ்!

பெண்கள் பாதுகாப்பு, முதியோர் நலன், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அவை குறித்துப் பார்க்கலாம்:-

* மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு ரூ.50 லட்சம் நிதியில் முதல்வரின் உதவித்தொகை திட்டம்.

* சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் இரவல் பெறுவோர்களுக்கு ரூ.2.8 கோடி மதிப்பில் மறுவாழ்வு இல்லங்கள்.

* அரசு கூர்நோக்கு, சிறப்பு மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் சிறார்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.

* சென்னை அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க ரூ.40 லட்சம் மதிப்பில் `பாதை திட்டம்’.

* தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகள் Simple Governance திட்டம் மூலம் எளிதாக்கப்படும்.

* சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு GPS பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு நிற ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம்.

* அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பயிலரங்கங்கள்.

உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb