Tamil News Live Today: `கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று, ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்!’ – இபிஎஸ் வலியுறுத்தல்

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்! – இபிஎஸ் வலியுறுத்தல்

“கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள்மீது அக்கறை இல்லை. அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் பலமுறை எஸ்.பி-யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார்

கஞ்சா, விஷ சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! – தமிழக அரசு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய
விவகாரம்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஐ தாண்டியிருக்கிறது. அவர்களை தகனம் செய்வதற்கு விறகுகள் அடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடங்கியது சட்டப்பேரவைக் கூட்டம்

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், குவைத் தீ விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று இரவு வரை 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இரவு தாண்டியும் பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வந்ததால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

இந்த விஷசாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88