சேலம்: மாநகர் Serious Crime Squad இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்! – உள்துறை நடவடிக்கையின் பின்னணி என்ன?

சேலம் மாநகர சீரியஸ் க்ரைம் ஸ்குவாடு இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர் கணேசன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது நிலப் பிரச்னை ஒன்றில் அப்போதைய பழனி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரமும், கணேசனும் லஞ்சம் கேட்டதாகக் கூறி புகார் எழுந்தது. மேலும், அது தொடர்பான் வீடியோ காட்சிகளும் பரவத் தொடங்கின.

புகாரளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்தது.

டிஸ்மிஸ்

அவ்வப்போது இது தொடர்பான விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் மேற்கண்ட விசாரணையில் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, அதற்கான அறிக்கை உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் அமுதா, கணேசனை டிஸ்மிஸ் செய்யக் கூறி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனடிப்படையில் மாநகரக் காவல் ஆணையர் விஜயகுமாரி, கணேசன் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.

2016-ம் ஆண்டு நடந்த சம்பவத்தின் விசாரணை முடிவில், சேலம் சீரியஸ் க்ரைம் ஸ்குவாடு இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம், காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb