நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை கங்கனா ரனாவத்தை, வியாழக்கிழமை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக கங்கனா ரனாவத் அன்றே, விமான நிலத்தில் செக்-இன் நேரத்தில் CISF பெண் காவலர் அறைந்ததாகவும், ஏன் என்று கேட்டபோது விவசாயிகளை ஆதரிப்பதாக அவர் கூறியதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும், அந்த வீடியோவில், பஞ்சாபில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாகவும் கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். பின்னர், கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர், `விவசாயிகளை அவமரியாதை செய்ததற்காக அறைந்தேன். அவர், விவசாயிகள் 100 ரூபாய்க்கு போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அவர் முன்பு கூறியிருந்தார். அப்போது என் தாயும் அந்த போராட்டத்தில் இருந்தார். அவர் அங்கே போய் உட்காருவாரா?’ என்று கூறியிருந்தார்.
சம்பவம் நடத்த அடுத்தநாளே, அந்தப் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்று சக நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்திருக்கிறார்.

I have no love lost for #Kangana Ranaut. But I can’t find myself joining this chorus of celebrating “the slap”. If security personnel start taking law into their hands none of us can be safe .
— Azmi Shabana (@AzmiShabana) June 7, 2024
இதுகுறித்து ஷபானா ஆஸ்மி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கங்கனா ரனாவத் மீது எனக்கு எந்த அன்பும் இல்லை. ஆனால், இந்த அறை விவகாரத்தின் கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்பு பணியாளர்கள் சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்தால், யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88