Nambikkai Awards: `இன்னும் அந்தக் காயம் அப்படியேதான் இருக்கு! – குமுறிய வாச்சாத்தி பெண்கள்!

சமத்துவத்துக்கும் உரிமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்து தன்னையே அர்ப்பணிக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு, ஒவ்வோர் ஆண்டும் நம்பிக்கை விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன்.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, மார்ச் 29-ம் தேதி, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ஆரவாரத்துடன் களைகட்டியிருந்த மேடை. வாச்சாத்தி பெண்கள் மேடையேறியபோது, ஒட்டுமொத்த மாக அமைதியில் ஆழ்ந்தது. `உண்மை ஒருபோதும் தோற்காது… நீதி வென்றே தீரும்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய வாச்சாத்தி பெண்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு விருதினை வழங்கினார்.

நீதி வென்ற போராளிகள் – வாச்சாத்தி பெண்கள்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் மேடையில் பேசும்போது, “இந்தப் போராட்டத்தில் விகடன் பல காலமாக உற்ற துணையாக இருந்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் வன்கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடி நீதியைப் பெற முடியும் என்பதற்கு வாச்சாத்தி மக்கள் சிறந்த உதாரணம்’’ என்று நெகிழ்ந்தார். இவரைத்தொடர்ந்து ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நீதிநாயகம் சந்துரு, பாதிக்கப்பட்ட பெண்கள் என அனைவரும் வாசத்தி சம்பவம் குறித்து பேசினர். அதனை முழுமையாகக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.