கோவை அதிமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி. அ.தி.மு.க 1980, 1989, 1996, 2006 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தாலும், அதை படிக்கட்டுகளாக வைத்து முன்னேறினோம்.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். வாக்களித்த மக்களை நாங்கள் மதிப்போம். அ.தி.மு.க தொடந்து மக்கள் பணி செய்யும். எங்களைப்போல யாரும் திட்டங்கள் கொண்டுவரவில்லை.
அண்ணாமலை அதிகமாகப் பேசியுள்ளார். அண்ணா, அம்மா, எடப்பாடி பற்றி பேசினார். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி விலக அண்ணாமலைதான் காரணம். இல்லையென்றால் இப்போது 30-35 இடங்கள் கிடைத்திருக்கும். அண்ணாமலை விமர்சனம் செய்வதை விடவேண்டும்.
பா.ஜ.க-வினர் கடந்தத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கியுள்ளார். 1.5 சதவிகிதத்தில் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
பா.ஜ.க ஆட்சிதான் மீண்டும் அமைகிறது. கோவைக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இப்போது அண்ணாமலை இங்கு நின்றார். நாளை வேறு எங்காவது நிற்பார். சிறுபான்மை மக்களுக்கு இப்போது தெளிவு கிடைத்திருக்கும்.
அ.தி.மு.க நிலையான முடிவில் இருக்கும். அ.தி.மு.க-வுக்கு சரிவு வந்தால், மிகப்பெரிய வெற்றி கிடைக்கும், இது வரலாறு. அண்ணாமலையின் தலைமை பதவியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb