NDA கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு – ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாகத் தகவல்!
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு.
இன்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்
டெல்லியில் கூடும் தலைவர்கள்..!
நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தனியாக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. `என்.டி.ஏ’ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் அதன் பிரதான கட்சியான பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களை கூட்டணி கட்சியின் மூலமே பெரும் நிலையில் பாஜக உள்ளது. இதனிடையே இன்று டெல்லியில் `இந்தியா’ கூட்டணி மற்றும் `என்டிஏ’ கூட்டணிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
என்டிஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதீஷ்குமார் ஆகியோரின் ஆதரவை இந்தியா கூட்டணியினர் ஏற்கனவே கோர திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்றைய இந்தியா கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என நேற்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. நேற்று ஏற்கனவே சரத் பவார் இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை அழைத்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் என்டிஏ தலைமையிலான இன்றைய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் டெல்லி புறப்பட்டுள்ளனர். இதில் பீகாரில் இருந்து நிதிஷ்குமார் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும், தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைப்பது பாஜகவுக்கு சாத்தியம் இல்லை என்னும் நிலையில் இருவரும் தங்கள் தரப்பில் வலுவான கோரிக்கைகளை பாஜக பக்கம் வைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இருவரும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோர வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடங்களை கேட்டு பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இருவரும் சபாநாயகர் பதவியை குறி வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இந்த கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாக சொல்லப்படுவதால், பாஜகவுக்கு இது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தின் முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், பாஜக தரப்பில் ஆட்சி அமைப்பது குறித்தும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88