ஐடி துறையில் அதிக சம்பளம் பெரும் சிஇஓ-களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இன்ஃபோசிஸ் சலில் பரேக் உள்ளார்.
அறிக்கையின்படி, 2024 நிதியாண்டில் சலீல் பரேக்கின் சம்பளம் ரூ.66.25 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் ரூ.166 கோடி சம்பாதித்து, விப்ரோவின் முன்னாள் சிஇஓ தியரி டெலாபோர்ட் (Thierry Delaporte) முதலிடத்தில் உள்ளார்.
சம்பள உயர்வுக்கு காரணமென்ன?!…
சலில் பரேக்கின் சம்பள உயர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான கட்டுப்படுத்தப்பட்ட ஸ்டாக் யூனிட்கள் (RSU) காரணம் எனக் கூறப்படுகிறது. இது நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈக்விட்டி இழப்பீட்டின் ஒரு வடிவமாகும்.
பரேக்கின் மொத்த ஊதியத்தில் நிலையான ஊதியம், மாறக்கூடிய ஊதியம், ஓய்வுபெறும் பலன்கள் மற்றும் பங்குகள் ஆகியவை அடங்கும். பரேக்கின் ஊதிய தொகுப்பில், நிறுவன பங்குகள் மூலம் ரூ.39.03 கோடியும், அடிப்படை ஊதியமாக ரூ.7 கோடியும், ஓய்வூதியப் பலன்களாக ரூ.47 லட்சமும் பெற்றார்.
அவரது மாறக் கூடிய ஊதியம் (variable pay) 2023-ம் நிதியாண்டில் ரூ.12.62 கோடியிலிருந்து, 2024-ம் நிதியாண்டில் ரூ.19.75 கோடியாக உயர்ந்தது.
*மற்ற தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) சம்பளம் என்ன?!…
*2023 நிதியாண்டில் ரூ. 28.4 கோடி சம்பாதித்த ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் சி. விஜயகுமார் ஐடி நிறுவனத்தில் அடுத்த அதிக ஊதியம் பெற்ற சிஇஓ ஆவார்.
*நவம்பர் 2022-ல் ஐடி நிறுவனமான எல் அண்ட் டி மற்றும் மைண்ட்ட்ரீயில் தேபாஷிஸ் சாட்டர்ஜி சிஇஓ-ஆக இணைந்த பிறகு, அவருக்கு 2023 நிதியாண்டில் 17.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.
*டெக் மஹிந்திராவின் மோஹித் ஜோஷி ஆண்டுக்கு ரூ.6.5 கோடியும், அதற்கு இணையான தொகையை மாறும் ஊதியமாக பெற்றார்.
*இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கடந்த மாதம் அதன் சிஇஓ கே. கிருதிவாசன், 2024 நிதியாண்டில் ரூ.25.36 கோடி ஈட்டியுள்ளார் எனக் கூறியது. இது அவரை நான்கு இந்திய ஐடி நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றும்.