போட்டி போட்டு வேலை பார்த்த அமைச்சர்கள் – திண்டுக்கல் மலைக்கோட்டையில் செங்கொடி ஏறியது எப்படி?!

திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி. எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் பிரிந்து அ.தி.மு.க-வை தொடங்கியவுடன் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் எம்.பி தேர்தல் தான். அந்தத் தேர்தலில் உதயசூரியனை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது இரட்டை இலை. 1980-க்கு பிறகு திண்டுக்கல் தொகுதி 35 ஆண்டுகளாக திமுக வசம் செல்லவே இல்லை. கடந்த 2019 தேர்தலில் திமுக-வுக்கு நிகரான போட்டி இல்லாத காரணத்தால் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேலுச்சாமி வென்றார்.

அமைச்சர்களுடன் சச்சிதானந்தம்

இந்நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சிட்டிங்  எம்.பி வேலுச்சாமிக்குதான் மீண்டும் சீட் என திமுகவினர் நம்பியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்த்திராதவண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்த்திற்கு சீட் கொடுக்கப்பட்டது.

அதிமுக-வும் நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகம்மது முபாரக்-ஐ களமிறக்கியது. பாஜக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் திலகபாமாவுக்கு சீட் கொடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியில் பெரிய அளவில் கட்டமைப்பு இல்லாதபோதும், சச்சிதானந்தம் தொகுதியில் பெரிய அளவுக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளராக இருந்தபோதும், திமுக கூட்டணி பலத்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

அமைச்சர்களுடன் சச்சிதானந்தம்

அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முகமது முபாரக் மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லஞ்சம் இஸ்லாமிய வாக்குகளை நம்பி களம் இறங்கினார். அ.தி.மு.க காரராவே மாறி அனைத்து தரப்பு வாக்குகளையும் பெற முயற்சித்தார். ஆனாலும் சிட்டிங் உள்ளூர் திமுக அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணிக்கு   நிகராக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் வைட்டமின்களை இறக்காமல் பெயரளவுக்கே தேர்தல் வேலை செய்தனர். இது அதிமுக வேட்பாளராக்கு பின்னடைவாக அமைந்தது.

பாமக பொருளாளர் திலகபாமா சொந்த கட்சியிலும் கூட்டணி கட்சியிலும் பெரிய அளவில் ஆதரவின்றி தனியாகவே வயலில் பாட்டு பாடியும், சாலையோரத்தில் காய்கறி விற்றும், வடை போட்டும், வெங்காயம் விற்றும் வாக்குச்சேகரித்தார். இருப்பினும் ஒட்டுமொத்த பா.ம.க நிர்வாகிகளும் அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியாவுக்காக தர்மபுரியில் இறக்கப்பட்டுள்ளதால் தனித்துவிடப்பட்டார். மேலும் கூட்டணி கட்சியினரின் போதிய ஆதரவும் இல்லாதது பெரிய அளவில் வாக்குகளை பெற முடியாமல் போனதற்கு காரணமாகிவிட்டது. 

நாம் தமிழர் கட்சி சீமானின் பேச்சால் வசீகரிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினரின் கணிசமான வாக்குகள் மருத்துவர் கயிலை ராஜனுக்கு கிடைத்தது.

சச்சிதானந்தம்

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் அமைச்சர் சக்கரபாணிக்கு  உட்பட்டும், கிழக்கு மாவட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உட்பட்டும் உள்ளது. கடந்த எம்.பி தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி திண்டுக்கல். இதனால் கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் வேலை செய்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எளிதில் வெல்ல காரணமானது.

கடந்த எம்.பி தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி திண்டுக்கல். அதில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றதால் இம்முறையில் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வெல்ல வைப்போம் என திண்டுக்கல்லை சேர்ந்த அமைச்சர்கள் சபதம் ஏற்றனர். இறுதியில் 4,43,821வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வென்றுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ தவிர பாஜக கூட்டணி பாமக, நாம் தமிழர் மற்றும் 9 சுயேட்சைகள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

சச்சிதானந்தம்

பெற்ற வாக்குகள்

திமுக கூட்டணி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்–  6,70,149
அதிமுக கூட்டணி – எஸ்டிபிஐ– 2,26,328
பாஜக கூட்டணி – பாமக– 1,12,503
நாம் தமிழர் – 97,845

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88