தலைநகரில் மூன்று தொகுதிகளையும் மீண்டும் தட்டி தூக்கிய திமுக! – சென்னை நிலவரம்

ஏழுகட்டமாக இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்று இந்தியர்கள் தாண்டி உலக நாடுகளும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவிலான தேர்தலைத் தாண்டி, மாநிலத்தில் உள்ள முதன்மை கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நடக்கிறது.

அறிவாலயம்

தமிழகத்தைப் பொறுத்தவரை 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 15 திமுகவும் ஒரு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். கடந்த முறை போல இந்த முறையும் மூன்று தொகுதிகளையும் வெற்றிபெறவேண்டும் என்று திமுக பெரும் முனைப்புக் காட்டியது.

கடந்த முறை வெற்றிபெற்ற அதே மூவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தென் சென்னையில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அதே தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.பி-யான ஜெயவர்தனன் போட்டியிட்டிருந்தார். சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி மீது ஒருசில அதிருப்தி நிலவுவதால் அந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று பேசப்பட்டது. இருந்தபோதிலும், வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே தமிழச்சிக்கு ஏறு முகமாகவே இருந்தது.

முடிவில் தமிழச்சி பெற்ற வாக்குகள் 4,62,377. தமிழிசையைப் பொறுத்தவரை 2,65,530 வாக்குகளையும், ஜெயவர்த்தன் 79,074 வாக்குகளும் பெற்றிருந்தார். தென் சென்னையின் நிலைதான் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நிலவியது. அதிலும் வடசென்னையைப் பொறுத்தவரை திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த மனோ 1,58,111 வாக்குகளையும், பாஜகவைச் சேர்ந்த பால் கனகராஜ் 1,13,318வாக்குகளையும் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்டத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 3.3 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன், மத்திய சென்னை

இரண்டு தொகுதிகளும் இப்படியிருக்க மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தொடக்கம் முதலே ஏறி மேலே வந்துகொண்டே இருந்தார். தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகளையும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகளையும் [பெற்றுள்ளார். மொத்தமாக 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றிருக்கிறார்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளையும் தாண்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88