நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்… மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்!

நாம் தமிழர் கட்சி, 2024 நாடாளுமன்ற தேர்தலின் மூலம், 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது. தேர்தல் நெருக்கத்தில் கட்சியின் சின்னம் மாறிய நிலையிலும் கடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகள் பெற்றிருப்பது கவனம்பெறுகிறது.

சீமான்

2016 சட்டமன்ற தேர்தலில் என்ட்ரி கொடுத்த நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டு 1.1 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.8 சதவீத வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலி 6.8 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் சுமார் 35 லட்சம் வாக்குகளை பெற்று 8.2 சதவீத வாக்குகளை உறுதி செய்திருக்கிறது அக்கட்சி.

நம்மிடம் பேசிய நா.த.க நிர்வாகிகள் சிலர், “12 தொகுதிகளுக்கு மேல் 1 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். 7 தொகுதிகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் பெற்றிருக்கிறோம். அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகள் பெற்றுள்ளார். புதுச்சேரி நீங்கலாக தமிழ்நாட்டின் 39 தொகுதியில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி சுமார் 35,60,485 வாக்குகள் பெற்றுள்ளோம். அதாவது 8.22% வாக்குகள். புதுவையில் 39,603 வாக்குகளும், விளவங்கோடு இடைத்தேர்தலில் 8,150 வாக்குகளும் பெற்றிருக்கிறோம். திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்” என்றனர்

சீமான்

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், “நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் சின்னம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம். குறுகிய காலத்தில் சின்னத்தை கொண்டுசென்று 8% வாக்குகளை கடந்திருப்பது வியப்புதான். 8 சதவீத வாக்குகளை கடந்ததன் மூலம் மாநில கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது நாம் தமிழர் கட்சி. 2016-ல் தேர்தல் களத்துக்கு வந்த நா.த.க 8 ஆண்டுகளில் மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88