Gautam Adani: ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்… அம்பானியை முந்தி முதலிடம் பிடித்த அதானி..!

ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகித்துள்ளார், கவுதம் அதானி.

சமீபத்தில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ஆசிய கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் 111 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9.21 லட்சம் கோடி) சொத்து மதிப்பை கொண்டு அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி 109 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.  உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் அதானி 11-வது இடத்தையும், அம்பானி 12-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதானி – Adani

2002-ல் உலக பொருளாதாரமே மந்தமான வளர்ச்சியைக் கண்ட போதிலும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார், அதானி. ஆனால், 2023-ல் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை. அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. அதனை தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் 150 பில்லியன் டாலர் அளவில் மிக பெரிய சரிவைச் சந்தித்தது. இதனால் உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்திலிருந்தவர், 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

நிறுவனத்தின் மீதிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மறுத்து வந்த நிலையில், கடந்தாண்டின் இறுதியிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கின.

2024-ல், அதானியின் நிகர சொத்து மதிப்பு 26.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அம்பானியின் சொத்து மதிப்பு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.