‘சட்டப்பேரவையும் போச்சு… நாடாளுமன்றமும் போச்சு?!’ – கலங்கும் சந்திரசேகர ராவ்

தெலங்கானாவை பொறுத்தவரையில் கடந்த 2014-ல் நடந்த தேர்தலில் டி.ஆர்.எஸ் 11, காங்கிரஸ் 2, பா.ஜ.க, ஏ.ஐ.எம்.எம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. 2019 தேர்தலை பொறுத்தவரையில் டி.ஆர்.எஸ் 9, பா.ஜ.க 4, காங்கிரஸ் 3, ஏ.ஐ.எம்.எம் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. இந்தசூழலில்தான் கடந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. எப்படியும் மூன்றாவது முறையாக முதல்வராகிவிடலாம் என்கிற ஆசையில் இருந்தார், சந்திரசேகர் ராவ். அதேநேரம் கர்நாடகாவில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸூம், விட்டதை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.கவும் தீவிரமாக களமாடின.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

தேர்தல் முடிவில் 64 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கைப்பற்றியது. இதனால் சந்திரசேகராவின் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் கனவு தகர்ந்து போனது. இந்தசூழலில்தான் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க, டி.ஆர்.எஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் காங்கிரஸுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நகர்குர்நூல், மல்காஜ்கிரி, போங்கீர், நல்கொண்டா உள்ளிட்ட 15 தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தியது. தேர்தல் முடிவில் காங்கிரஸ் எட்டு இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

பா.ஜ.கவை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது. குறிப்பாக விஜய் சங்கல்ப் யாத்ரா பேரணி மூலமாக பாஜக அரசு செய்த சாதனைகள் குறித்து மக்களிடத்தில் விளக்கியது. பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.பிக்களான ராமுலு, பாட்டீஸ் வடக்கு தெலங்கானாவில் பலம் வாய்ந்தவர்கள். எனவே அவர்களை கட்சிக்கு கொண்டுவந்தது கூடுதல் பலம். இதனால் 10 இடங்களுக்கு குறிவைத்த பாஜகவுக்கு 8 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மறுப்பக்கம் பிஆர்எஸ் கட்சியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் சரிக்கட்டி விடலாம் என சந்திரசேகரராவ் நினைத்திருந்தார். ஆனால் களம் அவருக்கு சாதகமாக இல்லை.

பாஜக

மகள் கவிதாவின் கைது, பெத்தப்பள்ளி எம்.பி வெங்கடேஷ் நேதா, வாரங்கல் எம்.பி தாயகர், செவெல்லா எம்.பி ரஞ்சித் ரெட்டி ஆகியோர் காங்கிரஸில் இணைந்தது பெரும் அடியை கொடுத்தது. போதாக்குறைக்கு நகர்குர்நூல் எம்.பி ராமுலு, ஜாகீராபாத் எம்.பி பாட்டீஸ் ஆகியோர் பா.ஜ.கவுக்கு தாவியது பெரும் சிக்கலை கொடுத்தது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க என இரு தேசிய கட்சிகளுக்கும் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. !

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88