மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா பேசும்போது, “நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றினீர்கள். நாம் எங்கு சென்றாலும் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போட்டோம் என்று மக்கள் கூறினார்கள், கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு போட்டோம் என்று யாரும் கூறவில்லை.
ஆனால், திமுக கூட்டணியை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வருகிறார்கள். மேலூர் தொகுதிக்கு 19 ரவுண்டும், மதுரை கிழக்கு தொகுதிக்கு 23 ரவுண்டும் உள்ளது. இதில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைசி வரை இருந்து பணியாற்ற வேண்டும்.
தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் 40 சதவிகிதம் வாக்குபெறுவார் என்று கூறுவது மோசமான கருத்துக்கணிப்பாகும்.
டி.டி.வி.தினகரன், பன்னீர்செல்வம் டெபாசிட் வாங்குவது பெரிய விஷயமாகும், தொகுதிக்கு பத்தாயிரம் வாக்குகள்தான் இவர்கள் பெற்றுள்ளார்கள். அது மட்டுமல்ல கோவையில் பாஜக-வுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், ஒரு லட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.
இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பாகும். ஏனென்றால் நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஒரு சதவிகிதம்தான் வெற்றி வாய்ப்பு என்று கூறினார்கள். ஆனால், 25 சகவிதம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். நிச்சயம் 2026-ல் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். நம்மை விட்டால் வேறு ஆள் கிடையாது, யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, நடைபெற்ற தேர்தலில் டாக்டர் சரவணன் அமோக வெற்றி பெறுவார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb