இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு 7 கட்டங்களாக நடத்து முடிந்தது. இதில், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு மத்தியில் ஆளும் ஒரு கட்சிக்கு எதிராக 37 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணியமைத்த முதல் தேர்தல் இதுவே. இருப்பினும், கடந்த 2014-ல் 282 இடங்கள், 2019-ல் 303 இடங்கள் என தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்த பா.ஜ.க, இந்த முறை தனியாக 370, கூட்டணியாக 400 என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தத் தேர்தலை வரவேற்றது.
இதில், பா.ஜ.க தனது பிரசார முழக்கங்களாக, `நாட்டைக் கொள்ளையடிக்க ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்’ உள்ளிட்டவற்றை முன்வைத்தது.
அதேபோல், எதிர்முனையில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைக் கூறிவந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள், `பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள்’ என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டன.
இவ்வாறாக, மொத்தம் 542 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாகவே குஜராத்தின் சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுவிட்டார். இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சியமைக்குமா அல்லது முதன்முறையாக இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 04-06-2024 அன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை & தேர்தல் முடிவுகள் தொடர்பான இன்ஸ்டன்ட் அப்டேட்களுக்கு, விகடன்.காமில் இணைந்திருங்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb