Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்… உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்!

பாஜக Vs இந்தியா கூட்டணி என இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில், ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே தமிழ்நாட்டின் 40 தொகுதிகளுக்கும் (புதுச்சேரி 1 தொகுதி உட்பட) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், தி.மு.க தலைமையிலான கூட்டணி (காங்கிரஸ், CPM, CPI, வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி (தே.மு.தி.க, புதிய தமிழகம், SDPI), பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, ஐ.ஜெ.கே, இ.ம.க.மு.க, த.ம.மு.க, ஓ.பி.எஸ் (சுயேச்சை) ), நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான்

இதில், தி.மு.க 22 தொகுதிகளிலும், அ.தி.மு.க 33 தொகுதிகளிலும், பா.ஜ.க 21 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் போட்டியிட்டிருக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற 39 இடங்களிலும் வெற்றிபெற்ற இதே தி.மு.க கூட்டணி (ஐ.ஜெ.கே தவிர), தற்போது தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் அங்கமாகக் களமிறங்கியிருக்கிறது.

அதேசமயம், கடந்த தேர்தலில் ஓர் அணியில் இருந்த அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க ஆகிய நான்கு பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் இரண்டு வெவ்வேறு கூட்டணியாகப் போட்டியிட்டிருக்கின்றன. இவ்வாறாக தமிழ்நாட்டில் கடும் போட்டி நிலவும் நிலையில், ஜூன் 4-ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் தொடர்பானஇன்ஸ்டன்ட் அப்டேட்களுக்கு விகடன்.காமில் இணைந்திருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb