ராஜராஜ சோழன் தந்தை வழங்கிய `அன்பில்’ செப்பேடு மாயம் – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருக்கிறது அன்பில். இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோயில். மிகவும் பழைமையான பிரம்மபுரீசுவரர் கோயில் என்றழைக்கப்படும் இந்த சத்தியவாஹீஸ்வரர் கோயிலில் இருந்த மிகப் பழைமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. அந்தச் செப்புத் தகடு மாமன்னர் சுந்தர சோழனால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தகடில் சுந்தரசோழன் ஆட்சியில் அவருடைய அமைச்சருக்கு 10 வேலி நிலத்தை வழங்கிய விவரம், மாதவ பட்டர் முன்னோர்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செய்த தொண்டுகள் குறித்து இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தச் செப்புத் தகடு மாயமானது குறித்து எழுந்த புகாரின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து, மாயமான செப்புத் தகடு குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், சத்தியவாஹீஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, செப்புத் தகடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது தகடை வைத்திருப்போர் குறித்து தகவல் அளித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் நேற்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்தார். அவரை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு, சுவாமி சந்நிதிகளில் வழிபட்ட சிவகுமார் கோயில் அலுவலகம் அருகே உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, அன்பில் கோயிலில் செப்புத் தகடு மாயமானது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

விசாரணை

அதனைத் தொடர்ந்து, எஸ்.பி சிவகுமார், அன்பில் சத்தியவாஹீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு கோயிலை பார்வையிட்டவர், செப்புத் தகடு மாயமானது குறித்து கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். செப்புத் தகடு மாயமானது குறித்து சிலை தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb