Tamil News Live Today: 2024 சட்டப்பேரவைத் தேர்தல்… அருணாச்சல், சிக்கிமில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன. தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அந்த மாநிலத்தில், தேர்தல் களத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக இருக்கின்றன. இந்தத் தேர்தலில் பாஜக முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பா.ஜ.க வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அதனால், 50 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Arunachal Pradesh

காலை 8 மணி நிலவரப்படி…

பா.ஜ.க – 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

தேசிய மக்கள் கட்சி – 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது…

காங்கிரஸ் – 1 இடத்தில முன்னிலை வகிக்கிறது…

மற்றவை – 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன…

மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நான்கு மாநிலங்களில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி SKM ஆட்சி செய்கிறது. எதிர்க்கட்சியாக சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் களத்தில் உள்ளன.

காலை 8 மணி நிலவரப்படி….

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா – 27 இடங்களில் முன்னிலை….

சிக்கிம் ஜனநாயக முன்னணி – 2 இடங்களில் முன்னிலை….

பா.ஜ.க – 0

காங்கிரஸ் – 0

மற்றவை – 0