தேர்தல் வாக்குப்பதிவில் வன்முறை: குளத்தில் வீசப்பட்ட EVM; என்ன நடக்கிறது மே.வங்கத்தில்?!

மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா உள்ளிட்ட ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் 1,020 மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) மற்றும் 978 நிறுவனங்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.

குளத்தில் வீசப்பட்ட EVM

ஏதேனும் பதற்றமான சூழல் நிலவினால், அதைத் சரிசெய்ய மொத்தம் 1,960 விரைவுப் பதிலளிப்புக் குழுக்கள் (க்யூ.ஆர்.டி) மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியின், பங்கரில் உள்ள சதுலியா பகுதியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) மற்றும் சி.பி.ஐ(எம்) ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலியில், சில வாக்குச்சாவடி முகவர்கள் சாவடிகளுக்குள் நுழைவதைத் தடை செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிக்குள் ஆத்திரத்துடன் நுழைந்த ஒரு கும்பல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) கைப்பற்றி அருகிலுள்ள குளத்தில் வீசியது. சிலர் VVPAT பொருத்தப்பட்ட EVM-ஐ அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதிக்கான தேர்தல் பொறுப்பு அதிகாரி, “இன்று காலை 6:40 மணியளவில் பெனிமாதவ்பூர் எஃப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் (எஸ்.சி) பிசியின் 129-குல்தாலி ஏசியில் உள்ள ரிசர்வ் இ.வி.எம் மிஷினை ஒரு கும்பல் எடுத்துச் சென்று குளத்தில் வீசியது.

மம்தா பானர்ஜி

இது தொடர்பாக துறை அதிகாரியால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார். இதே போன்று, நேற்று இரவு பசிர்ஹத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சந்தேஷ்காலியில் பதற்றம் ஏற்பட்டது. தற்போது சந்தேஷ்காலி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷேக் ஷாஜகானின் கூட்டாளிகள் தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதாக குற்றம்சாட்டியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பாட்டாளர்கள், மாநில காவல்துறையினரின் அச்சுறுத்தல் இருப்பதாக சில உள்ளூர் பெண்கள் மூங்கில் குச்சிகளுடன் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க ஆதரவாளர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைத் தாக்கியதைத் தொடர்ந்து அமைதியின்மை தொடங்கியதாக மாநில காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb