திரையரங்குக்குச் சென்று படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றில் வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், தற்போது திரையரங்குகளுக்கு எளிதாக சென்று படங்களை பார்க்கின்றனர். 

இதனால் கடந்த ஆண்டை விட 2023-ல், 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஒருமுறையாவது திரையரங்கிற்குச் சென்று படங்களை பார்த்துள்ளனர் என ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் (Ormax Media) குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 8,500 பேரிடம் பதில்களை சேகரித்து, ஆர்மேக்ஸ் மீடியா ஆய்வு நடத்தியது. அதனடிப்படியில் `Sizing The Cinema: 2024′ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது. 

திரையரங்கு

திரையரங்கு செல்வோரின் எண்ணிக்கை…

*2023 ஆம் ஆண்டில் சுமார் 15.7 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 29% அதிகம். அதுமட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வருவாய்கள் முதல் முறையாக 12,000 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. 

வருடத்திற்கு எத்தனை படம்?!…

*தெலுங்கு படங்களை காணும் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 9 படங்களுக்கு மேல் திரையரங்கில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மற்றும் பஞ்சாபி ரசிகர்கள் திரையரங்கில் அதிக படங்களை பார்க்கிறார்கள். 

*அதே சமயம் இந்தி பார்வையாளர்கள் வருடத்திற்கு சராசரியாக 3 படங்களை பார்க்கின்றனர். இந்தி  மொழி சினிமா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2022-ல் இருந்ததை விட 58% அதிகம்.  

*மலையாள சினிமா பார்வையாளர்களின் எண்ணிக்கை 19% அதிகரித்துள்ளது. 2022-ல் ஒரு கோடியாக இருந்த திரையரங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை 2023-ல் 1.2 கோடியாக உயர்ந்துள்ளது.

Watching TV

வளர்ச்சியா, வீழ்ச்சியா?!..

*கோவிட் தொற்றுக்கு பிறகு அதிக மக்கள் திரையரங்குகளுக்கு சென்றாலும், அவர்கள் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.

*தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களை காணும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி தெரிகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்…

தற்போது வீட்டில் இருந்தபடியே ஓ.டி.டி-ல் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

`தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் பரந்த பார்வையாளர்களைக் கட்டுப்படுத்துவதால், இந்தியாவின் மக்கள்தொகையில் சினிமாவின் 11% ரீச் என்பது சுமாரானதாகத் தெரிகிறது’ என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.