உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,“இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை அனுப்பினார்.

டெஸ்லா நிறுவனம்

அவருடைய உண்மையான ஐடியிலிருந்து அவர் அனுப்பியதாகவே நான் நம்பினேன். மேலும், இதுபோல அவருடைய ரசிகர்களிடம் தொடர்ந்து பேசுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய குழந்தைகள், டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ்க்கான அவருடைய சில திட்டங்கள் போன்றவைகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினார். மேலும், தென் கொரியாவில் புதிய டெஸ்லா நிறுவனத்தை தொடங்கவிருப்பதாகவும், அது தொடர்பாக தென் கொரிய அதிபரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஒருமுறை, நான் உன்னை காதலிக்கிறேன்…

அது உனக்கு தெரியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில், நான் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அப்போது, இவர் எலான் மஸ்க் தானா என எனக்கு மீண்டும் சந்தேகம் வலுத்தது. அது தொடர்பாக அவரிடம் பேசியபோது, அவர் சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் செய்தார். அதில் அவருடைய முகம், குரல், உடல் மொழி என அனைத்தும் அப்படியே இருந்தது. அதனால் அவரை எலான் மஸ்க்தான் என நம்பினேன். அதன்பிறகுதான், அவருடைய தென் கொரியா நிறுவனத்தில் 50,000 டாலர் முதலீடு செய்வதற்கு கேட்டுக்கொண்டார்.

மோசடி

மேலும், இந்த முதலீடு என்னை பெரும் செல்வந்தராக்கும் என்றும், அவருக்கு பிடித்தவர்களை செல்வந்தர்களாக்குவது மகிழ்ச்சியான செயல் எனக் கூறினார். தென்கொரிய டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் வங்கி கணக்கு என ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்தக் கூறினார். நானும் அதுபோலவே செய்தேன். அதற்கு பிறகு அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.