சாம் ஆல்ட்மேன் நடத்தும் ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம், இந்தியாவில் தனது முதல் பணியாளராகப் பிரக்யா மிஸ்ராவை (Pragya Misra) நியமித்துள்ளது. சாட்ஜிபிடி டெவலப்பர் பிரக்யா மிஸ்ராவை அரசாங்க உறவுகளின் தலைவராக இணைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓப்பன்ஏஐ நிறுவனம் இந்தியாவின் டெக் மார்க்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. ஓப்பன்ஏஐ-யின் சாட்ஜிபிடியானது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெரிய பயனர்களைக் கொண்டுள்ளது.

OpenAI

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்பை வழங்குகிறது.

இந்நிலையில், ஓப்பன்ஏஐ இந்தியாவில் தனது முதல் பணியாளராகப் பிரக்யா மிஸ்ராவை நியமித்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரத் தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

யார் இந்தப் பிரக்யா மிஸ்ரா?!  

* கல்வி…

39 வயதாகும் பிரக்யா மிஸ்ரா 2012-ல் சர்வதேச மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் பேரம் பேசுதல் மற்றும் பேச்சுவார்த்தைகளில் ( (Bargaining and Negotiations) டிப்ளோமா பெற்றுள்ளார். 

* பணி…

2021 ஜூலை மாதம் முதல் Truecaller-ன் பொது விவகார இயக்குநராகப் பணியாற்றினார். அங்கு அவர் அரசாங்க அமைச்சகங்கள், முதலீட்டாளர்கள், முக்கிய பங்குதாரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் பணியாற்றினார். Truecaller-ல் பணியாற்றுவதற்கு முன்பு அவர் மூன்று ஆண்டுகள் மெட்டா பிளாட்ஃபார்ம்களில் பணிபுரிந்தார். 

அவர் 2018-ம் ஆண்டில் தவறான தகவல்களுக்கு எதிரான வாட்ஸ்அப்பின் பிரசாரத்துக்குத் தலைமை தாங்கினார். எர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) மற்றும் டெல்லியில் உள்ள ராயல் டேனிஷ் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 

Pragya Misra

* இன்ஃப்ளூயன்சர்…

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35,000 பாலோவர்கள் உள்ளனர், தியானப் பயிற்சியாளரான இவர் ஒரு பாட்காஸ்டராகவும் (podcaster) உள்ளார். `பிரக்யான் பாட்காஸ்ட்’ ((@pragyaan_podcast) பக்கத்தில், விருந்தினர்களை அழைத்து தியானம் மற்றும் உணர்வு உள்ளிட்ட தலைப்புகளைக் குறித்துக் கலந்துரையாடுகிறார். 

* புது அத்தியாயம்…

ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஓப்பன்ஏஐ உடன் தனது தொழில் வாழ்க்கையில் இணையவிருக்கிறார். ஜெனரேட்டிவ்-ஏஐ நிறுவனத்தில் இந்தியாவின் பொதுக் கொள்கை விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.  

பயணங்கள் தொடரட்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.