கேரள மாநிலத்தில் விவாதத்தை கிளப்பிய சினிமா `தி கேரளா ஸ்டோரி’. பெண்களை குறிவைத்து மதம் மாற்றி பயங்கரவாதிகள் கும்பலிடம் திட்டமிட்டு சேர்க்கப்படுவதாக கதை கருவைக் கொண்ட இந்த சினிமாவை ரிலீஸ் செய்ய கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எதிர்ப்புகளைத் தாண்டி தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. பாக்ஸ் ஆப்பீஸில் இடம் பிடித்த அந்த சினிமா இந்தியாவில் மட்டும் சுமார் 225 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல் வெளியானது.

தியேட்டரில் வெளியான பிறகு கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது. தி கேரளா ஸ்டோரி சினிமாவை இன்று (ஏப்.5) இரவு 8 மணிக்கு ஒளிபரப்புவதாக நாட்டின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. ‘உலகை நடுங்க வைத்த கேரளாவின் கதை உங்கள் முன்னால்’ என்ற கேப்ஷனோடு அந்த சினிமா ஒளிபரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தூர்தர்ஷன். தேர்தல் சமயத்தில் தி கேரளா ஸ்டோரி சினிமா ஒளிபரப்பப்படுவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூர்தர்ஷன் சேனல்

தி கேரளா ஸ்டோரி சினிமா தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், “கேரளா மாநிலத்துக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி சினிமாவை ஒளிபரப்பும் முடிவை தூர்தர்ஷன் உடனடியாக கைவிட வேண்டும். தேர்தல் சமயத்தில் கேரளாவை இழிவுபடுத்தும் நோக்கில் நாட்டின் அதிகாரபூர்வ செய்தி சேனலை மத்திய அரசு பயன்படுத்துவதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். பல மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக பரஸ்பரம் சகோதரர்களைப்போன்று வாழும் மாநிலம் கேரளா. உலகத்தின் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கும் கேரளாவை அவமானப்படுத்தவும், மத போட்டியை வளர்க்கவும் சங்பரிவாரின் மூளையில் உதித்ததுதான் இந்த சினிமா.

பினராயி விஜயன்

பல துறைகளில் முன்னிலையில் உள்ள கேரளாவை சோமாலியா எனச்சொல்லி அவமானப்படுத்தியவர்கள், இப்போது மத மாதற்றத்தின் கேந்திரம் என பிரசாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சங்பரிவாரின் வகுப்புவாத அஜண்டாவுக்கு தூர்தர்ஷன் போன்றவை கைப்பாவையாக செயல்படக்கூடாது. கேரளா ஸ்டோரி சினிமாவை ஏப்ரல் 5-ம் தேதி ஒளிபரப்புவதாக அறிவித்தது கேரளாவை அவமானப்படுத்துவதற்கு சமம். வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மதசார்பற்ற கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.