காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார். 2022 ஜூலையில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணமோசடி வழக்கு தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது. அப்போது ராபர்ட் வதேரா, ‘மக்கள் விரும்பினால் தீவிர அரசியலில் சேருவது குறித்து பரிசீலிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ராபர்ட் வத்ரா

ஆனால் அதற்குப் பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராபர்ட் வதேரா,“ரேபரேலி அல்லது அமேதியை பிரதிநிதித்துவம் செய்பவர், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் உழைக்க வேண்டும். பாகுபாடு, பிரிவினைவாத அரசியலை செய்யக்கூடாது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரால் அமேதி மக்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஸ்மிருதி இரானி தொகுதிக்கு அடிக்கடி வராததால், அவர்மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும், அவர் இந்தத் தொகுதிகளின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. காந்தி குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது, அவர்களை இழிவுபடுத்துவது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதில் மட்டுமே அவர் அக்கறை காட்டுகிறார். அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், ஜகதீஷ்பூர் மக்களுக்காக பல ஆண்டுகளாக காந்தி குடும்பம் கடுமையாக உழைத்திருக்கிறது.

ராபர்ட் வத்ரா

இதில் அமேதி மக்கள் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். மேலும், காந்தி குடும்ப உறுப்பினர் திரும்பி இந்தத் தொகுதிக்கு வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். உண்மையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக முடிவெடுத்தால் அவர்களது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று கூட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான என்னவெல்லாம் செய்தோம் என்பது மக்களுக்குத் தெரியும்…

அவர்கள் என்னுடன் சமூக ஊடகங்களில் இணைந்திருக்கிறார்கள், என் அலுவலகத்திற்கு வெளியே என்னைச் சந்திக்கிறார்கள், எனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.” எனத் தெரிவித்து, சூசகமாக அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கோட்டைகளான ரேபரேலி, அமேதியில் காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவரின் கணவர் ராபர் வத்ரா அந்த தொகுதி குறித்து பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.