நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற தொகுதியானது திமுக-வின் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்மூலம் அக்கட்சியின் வேட்பாளராக சமீபத்தில் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானவுடன் இவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது. அதில் ஒன்று தான் கடந்த காலங்களில் அவர் சாதிய வன்மத்திடன் பேசும் வீடியோ ஒன்று. இதனை சிலர் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் பக்கம் என அனைத்திலும் பரப்பி கண்டனம் தெரிவித்தனர்.

சூரியமூர்த்தி

இதுகுறித்து அறப்போர் இயக்கமும் சூரியமுர்த்தி சாதிய ரீதியாக வெறுப்புணர்வுடன் பேசுவதை சுட்டி காட்டியுள்ளது. ஆனால் சூரிய மூர்த்தியோ அந்த வீடியோவில் பேசுவது நான் இல்லை என்று சமாளித்தார். அதேப்போன்று மற்றொரு வீடியோ ஒன்றில் ஆணவக்கொலைகளுக்கு ஆதரவாக வெட்டுவேன், குத்துவேன் என பேசும் வீடியோவை அறப்போர் இயக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. மேலும் திமுக கூட்டணி கட்சியில் நிற்கும் வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் நிற்பதால், சமூக நீதிக்காக போராடும் திமுக-வுக்கே அவப்பெயர் எனவே வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பெயரில் இன்று காலை திடீர் வேட்பாளர் மாற்றத்திற்கான அறிக்கை வெளியானது. அதில், புதிய வேட்பாளராக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.