விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `தங்கமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகனாக யுவன் மயில்சாமி நடிக்கிறார்.

இவர் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன். இவருக்கு ஜோடியாக `நம்ம வீட்டுப் பொண்ணு’ தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த அஷ்வினி நடிக்கிறார். மேலும் நடிகை நீபா, நடிகர்கள் பிர்லா போஸ், அம்பானி சங்கர் எனப் பல நடிகர்கள் இந்தத் தொடரில் நடிக்கிறார்கள். கலகலப்பாக அதே நேரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஷூட்டிங்கின் நடுவே கேமரா, மைக்குடன் நுழைந்தோம்.

தங்கமகள் சீரியல் செட்

“எல்லா நாளும் எனக்கு கொஞ்சம்கூட ரெஸ்ட் இல்லாம தொடர்ந்து ஷூட் போயிட்டு இருக்கும். இன்னைக்குத்தான் அதிசயமா ரெஸ்ட் கிடைச்சது இந்த சமயம் சரியா நீங்க வந்துட்டீங்க..!” என்றவாறு நம்மை வரவேற்றார் தொடரின் நாயகன் யுவன். அவருடன் இந்தத் தொடரில் நண்பராக நடிக்கும் அம்பானி சங்கரையும், வில்லனாக மிரட்டும் பிர்லா போஸையும் தனியா அழைத்து வந்தார். முதலாவதாக பிர்லா போஸிடம் மைக்கை நீட்டினோம்.

“இந்தத் தொடரின் இயக்குநர் ஆதித்யா என் நீண்ட நாள் நண்பர். அவர் இந்தத் தொடரில் என் கேரக்டர் குறித்துச் சொல்லவும் ஓகே பண்ணிட்டேன். ஆனா, யுவன் தான் இதுல லீடா பண்றார்னு எனக்குத் தெரியாது. நாங்க ரெண்டு பேரும் ரஜினி சாருடைய `வேட்டையன்’ படத்துல நடிக்கிறோம். அங்க செட்ல பேசிட்டு இருக்கும் போது இந்தப் படம் முடிச்சிட்டு விஜய் டிவியில் ஒரு புராஜக்ட் பண்ணப் போறேன். அதனுடைய டைரக்டர் ஆதித்யான்னு சொன்னார்!” என்றதும் யுவன் இடைமறித்தார்.

தங்கமகள் சீரியல் செட்

“அந்தப் படத்துல கிளீன் ஷேவ்ல இருந்தேன். அந்த லுக்ல என்னைப் பார்த்துட்டு எப்படி இந்த லுக்ல என்னை செலக்ட் பண்ணார்னு தெரியல. எப்படி ஒரே மாசத்துல தாடி வளரும்? லுக் செட் ஆகிடுமாண்ணே?னு இவர்கிட்ட கேட்டுட்டு இருந்தேன். அங்க அவரும் இந்தப் புராஜக்ட் பண்றார்னு சொல்லவும் ரெண்டு பேருக்கும் ஷாக். இவருக்கெல்லாம் என்னங்க பிரச்னை.. எல்லா சீரியலிலும் ஒரே கெட்டப் தான்!” என்றதும் பிர்லா போஸ் தொடர்ந்து பேசினார்.

“இதுவரைக்கும் டைரக்டர் யாரும் என் லுக்கை மாத்தணும்னு சொல்லல. அதனால அப்படியே செட் ஆகிடுச்சு. இந்த சீரியலில் நடிக்கிற நீபா மேம் கூட இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் சேர்ந்து ஒர்க் பண்றேன்!” என்றதும் மூன்று சகோதரிகளும் ஒருசேர என்ட்ரியானார்கள்.

தங்கமகள் சீரியல் செட்

“நான் தான் மூத்தப் பொண்ணு மீனாட்சி. குடும்பப் பொறுப்பு எனக்கு அதிகம். என் மாமாவை அதிகமா லவ் பண்ணிட்டு இருக்கேன். அவர் தான் எனக்கு எல்லாமே.. உங்க எல்லாருக்கும் ஏற்கெனவே என் முகம் பரிச்சயம்தான்.. சமீபத்தில் `பாரதி கண்ணம்மா’ தொடரில் கூட நடிச்சிருந்தேன். அடுத்தடுத்து படிகட்டுகளை ஏறிட்டே இருக்கேன். சீக்கிரமே நல்லதொரு நிலைக்கு வந்திடுவேன்!” என்றவரைத் தொடர்ந்து இரண்டாவது தங்கை பேசினார். “நான் தாரணி. கபடி பிளேயர். வீட்ல ரொம்ப துறுதுறுன்னு தான் இருப்பேன். நிஜத்தில் நான் இலங்கை தமிழ்ப் பொண்ணு. கிட்டத்தட்ட ஒரு வருஷம் வாய்ப்புத்தேடி அலைஞ்சு கடைசியா நல்லதொரு வாய்ப்பு இந்த சீரியல் மூலம் எனக்கு கிடைச்சிருக்கு. அந்த வாய்ப்பை இறுக்கமா பிடிச்சுக்கணும்னு நினைக்கிறேன்!” என்றார். இறுதியாக தொடரில் மூன்றாவது தங்கையாக நடிக்கும் மனுஶ்ரீயிடம் பேசினோம். “நான் திவ்யா. எங்க ஃபேமிலியில் யாருமே படிக்கல. நான் நல்லா படிக்கவும் செய்வேன், சாப்பிடவும் செய்வேன். இதுதான் என் முதல் சீரியல். தானாக வந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திட்டு இருக்கேன்னு நம்புறேன்!” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து அவர்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.