வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையொட்டி, இன்றைய தினம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை கதிர் ஆனந்தின் தந்தையும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, ‘‘இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருந்துவிட்டேன். ஒரே தொகுதியில் நின்றோம்; வென்றோம்; அதோடு போனோம் என்று கருதிக்கொண்டிருக்கிறவன் நான். நல்லப்பெயருடன் போக வேண்டும். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கின்ற காரியத்தை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்

இன்னொருப் பக்கம் சிறுபான்மையினரின் உயிரை எடுப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. வடகொரியாவில் நடப்பதுபோல ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த முறை நீங்கள் போடுகின்ற ஓட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக போடுகின்ற ஓட்டு. நான் மிசாவில் சிறைச் சென்றபோது, என் மகன் கதிர் ஆனந்த் ஒரு வயது குழந்தை. என்னை வண்டியில் ஏற்றியபோது, என் சட்டையை பிடித்துக்கொண்டு ‘விடமாட்டேன்’ என்றார்.

விரல்களை பிடுங்கிப் போட்டுவிட்டு வண்டியில் ஏறிப் போனேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு என் மனைவி அவனைத் தூக்கிக்கொண்டு வந்தார். வாங்கி முத்தமிடப் போனேன். அங்கிருந்த வார்டன் சின்னக்குழந்தையின் பிஞ்சிக் கையை பிடுங்கியதோடு, என்னைப் பார்த்து ‘நீ ஒரு குற்றவாளி. ஒருவேளை மனம் பேதலித்து அந்தக் குழந்தையை கொன்னுட்டீனா’ என்றார்.

கதிர் ஆனந்த்

நண்பர்களே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். பிள்ளையைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும், அந்த வேதனை. அதற்குப் பிறகு ஓராண்டுக் காலம் என் மகனை நான் தொடவே இல்லை. அவ்வளவுத் தியாகம் செய்திருக்கிறேன்’’ என்றார் கண்ணீர் ததும்ப. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘எங்கள் வேட்பாளரையே கைது செய்யச்சொல்லி, இங்கு செல்வாக்குப் பெற்ற ஒரு வேட்பாளராக நிற்பவர் மத்தியில் சொல்லியிருக்கிறார். மேலிடத்தில் இருந்து எனக்கு அந்த செய்திகள் வந்தன. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.