மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணி மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு இன்னும் இழுத்துக்கொண்டெ செல்கிறது. பா.ஜ.க கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை கழற்றி விடும் மனநிலையில் பா.ஜ.க இருந்தது. ராஜ் தாக்கரே கூட்டணிக்காக முதல்வர் ஷிண்டே மற்றும் பா.ஜ.க தலைவர்களை சந்தித்துப்பேசினார். ஆனாலும் பா.ஜ.க கூட்டணியில் அவர் சேருவதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து எப்படியும் பா.ஜ.க கூட்டணியில் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவதற்காக நேற்று முன் தினம் இரவு ராஜ் தாக்கரேயும் அவரது மகனும் டெல்லி சென்றனர்.

அவர்கள் நேற்று மாலையில் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார்கள். சிவசேனா இரண்டாக உடைந்ததில் உத்தவ் தாக்கரே மீது மக்கள் மத்தியில் குறிப்பாக மராத்தியர்களிடம் ஒரு வித அனுதாபம் இருக்கிறது. அந்த அனுதாபத்தை சரி செய்யவேண்டுமானால் ராஜ் தாக்கரே பா.ஜ.க விற்கு அவசியமாக இருக்கிறது. எனவே அவரை தங்களது கூட்டணியில் சேர்ப்பது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருகிறது. பாஜ.க கூட்டணியில் ராஜ் தாக்கரே கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் கூறுகையில், பா.ஜ.க வுடனான பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கிறது. நாங்கள் தென்மும்பை, நாசிக் மற்றும் ஷிர்டி தொகுதியை கேட்டு இருக்கிறோம்” என்றார்.

ராஜ் தாக்கரேயை அமித் ஷா சந்தித்து பேசி இருப்பது குறித்து உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். நாண்டெட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே,”மோடியின் பெயரை சொன்னால் மகாராஷ்டிராவில் ஓட்டு கிடைக்காது என்று பா.ஜ.க-வுக்கு நன்றாக தெரியும். இங்கு தாக்கரே(பால்) பெயருக்குத்தான் ஓட்டு. எனவேதான் வெளியில் இருந்து தலைவர்களை திருட முயற்சி செய்கிறார்கள். முதலில் அவர்கள் பால் தாக்கரே புகைப்படத்தை திருடினார்கள்.

உத்தவ் தாக்கரே

இன்றைக்கு மற்றொரு தாக்கரேயை திருட முயற்சிக்கிறார்கள். எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு எனது மக்கள் போதும். நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இருந்த போது சிவசேனாவை அவர்கள் மோசமாக நடத்தினார்கள். எனவேதான் அவர்களின் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.