2024 மக்களவைத் தேர்தல் மொத்தமாக 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7-ம் தேதி 12 மாநிலங்களில் 94 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

நான்காம் கட்ட வாக்குப் பதிவு மே 13-ம் தேதி 10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20-ம் தேதி 8 மாநிலங்களில் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

ஆறாம் கட்ட வாக்குப் பதிவு மே 25-ம் தேதி 7 மாநிலங்களில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

இறுதி (7) கட்ட தேர்தல்!

ஆறாம் கட்ட தேர்தல்!

5ம் கட்ட தேர்தல்!

நான்காம் கட்ட தேர்தல்!!

மூன்றாம் கட்ட தேர்தல்!!

இரண்டாம் கட்ட தேர்தல்!!

முதல் கட்ட தேர்தல்!!

சட்டமன்றத் தேர்தல்கள்:

>ஆந்திரப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப் பதிவு.

>அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஒன்றாக ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப் பதிவு.

>ஒடிசாவில் இரண்டு கட்டங்களாக மே 25 மற்றும் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு.

தமிழகத்தில் ஏப்.19ல் நாடாளுமன்ற தேர்தல்:

வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27

வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28

திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்கு பதிவு!

2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல், சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

பாதுகாப்பு வசதி ஏற்பாடு:

*போதுமான அளவு மத்திய ஆயுத போலீஸ் (CAPF) படைகளை நிறுவுதல்

*அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையம்

*எல்லைகளில் ட்ரோன் கண்காணிப்பு

*நாடு முழுவதும் செக்போஸ்ட்

நான்கு முக்கிய சவால்கள்:

*பாதுகாப்பு வசதி ஏற்பாடு

*பணப்பட்டுவாடாவைத் தடுத்தல்

*போலி செய்திகள் முற்றிலுமாகத் தடுத்தல்

*வன்முறைகளைக் கட்டுப்படுத்துதல்

தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள்..! 

`85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!’

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடலில் 40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் தன்னார்வலர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் இருக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சக்‌ஷம் ஆப் மூலம் வாக்குச்சாவடிகளில் இருக்கும் வசதிகளை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளலாம்.” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 – வாக்காளர் விவரங்கள்

> மொத்த வாக்காளர்கள் 96.8 கோடி பேர்

> ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர்

> பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர்

> மூன்றாம் பாலினத்தவர்கள் 48,000 பேர்

> முதன்முறை வாக்காளர்கள் 1.8 கோடி பேர்

> 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர்

> ராணுவ வீரர்கள் – 19.7 லட்சம் பேர்

“97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்’’ – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகிறார். அவர், “தேர்தல் திருவிழாவில் அனைவரும் இணைந்து கொள்வோம். வன்முறை இன்றி அமைதியாக தேர்தலை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.” என்றார்

ஜனநாயக திருவிழா..!

2024-ம் ஆண்டு தொடங்கிய நாள்முதல் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. ராமர் கோயில் திறப்பு, தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல், தேர்தல் பத்திரம் தரவுகள் வெளியீடு என இந்த ஆண்டு தொடக்கம் முதலே அரசியல் களம் பரபரப்பாக இருந்தது.

தேர்தல் ஆணையம்

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஷா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியாகலாம். தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல் 2019 ஏப்ரல் 11-ம் தேதிமுதல் மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.