சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்த அடுத்த ஆண்டிலிருந்தே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியிருந்தது தி.மு.க. அது தொகுதி வாரியாக வேட்பாளர் தேர்வு நடத்துவது தொடங்கி, வெற்றி வாய்ப்பு குறித்து சர்வே எடுத்தது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கள நிலவரம் குறித்து ஆய்வு செய்தது, பூத் கமிட்டி அமைத்தது அவர்களுக்குப் பயிற்சிக் கூட்டங்கள் நடத்தியதுவரை எல்லாமே நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகளாகத்தான் இருந்தன.

முதல்வர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான குழு அமைத்தது, கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது, கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவு செய்தது, விருப்பமனு விநியோகம் செய்தது, தற்போது வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தி முடித்திருப்பது வரை நாடாளுமன்றத் தேர்தல் விவகாரத்தில் தொடர்ந்து தீவிரம் காட்டுகிறது தி.மு.க.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அனைத்துக் கட்சிக்களுக்கும் கடந்த முறை போட்டியிட்ட எண்ணிக்கையிலேயே தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வில் தி.மு.க தலையிடப் போவதில்லை என்றாலும் இன்னும் சில கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதி ஒதுக்குவது என்பதை முடிவு செய்யாமல் இருக்கிறது. இது குறித்து விசாரித்தால், சில தொகுதிகளைத் தி.மு.க விட்டுக்கொடுக்கவும் கேட்டுப் பெறவும் வாய்ப்பு இருப்பதால்தான் இந்தத் தாமதம் என்கிறார்கள். அப்டியானால் தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி-க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்தோம்…

நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க., வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி எண்ணிக்கையோடு எந்தெந்த தொகுதி என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறோம். கம்யூனிஸ்டுகளுக்கோ, காங்கிரஸ், ம.தி.மு.க-வுக்கே அந்த முடிவு இன்னும் எட்டவில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் விருப்பத்தேர்வில் இந்த முறை தென்காசி, வடசென்னை உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன.

திமுக ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி, பொள்ளாச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட சில தொகுதிகள் காங்கிரஸின் விருப்பத் தேர்வில் இருக்கின்றன. அதேபோல, திருச்சி, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் இந்த முறை தி.மு.க நேரடியாகப் போட்டியிடும் முடிவில் இருக்கிறது. மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் கூட்டணிக்குக் கொடுக்கும் முடிவில் இருக்கிறது தி.மு.க.

அதேபோல திருநெல்வேலி, கடலூர் ஆகிய தொகுதிகளின் சிட்டிங் எம்.பி-க்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்பு கொடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ்(கடலூர்), ப.வேலுச்சாமி(திண்டுக்கல்), சே.ராமலிங்கம்(மயிலாடுதுறை), ஞானதிரவியம்(திருநெல்வேலி) உள்ளிட்ட சிலருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். மேலும் பொள்ளாச்சி தொகுதியிலும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்கலாம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.