தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2021-ம் ஆண்டு ரூபாய் 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்ய நாதன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் நேரடியாகவும் காணொலி வாயிலாக  மா.சுப்பிரமணியன், டெல்லி சிறப்புப் பிரதிநிதி விஜயன், நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திறப்பு விழாவில் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.655 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மண் வளமும், நெல் வளமும் மிகுந்த மாவட்டம் டெல்டா. காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கும் மாவட்டம் மயிலாடுதுறை. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். 

மக்களின் மனசாட்சியாகச் செயல்படும் ஒரே ஆட்சி இந்த திராவிட மாடல் ஆட்சிதான். மக்கள் என்றும் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தான் நிற்பார்கள். மேலும், வருகிற மார்ச் ஆறாம் தேதி சென்னையில்  “நீங்கள் நலமா” திட்டம் துவங்கப்பட இருக்கிறது. 

இந்த திட்டம்  மக்கள் நேரடியாக தங்கள் குறை நிறைகளை அரசிடம் தெரிவிக்க உதவும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி.

தேர்தல் அறிவிக்கபட இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழகம் வரத் தொடங்கி இருக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவது பிரச்னை இல்லை, தமிழகத்துக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பிரதமர் வர வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.