நீங்கள் மஹிந்திராவில் தார் ஜீப் வாங்கப் போகிறவர்கள் என்றால், ஒரு சின்ன அப்டேட் கிடைத்திருக்கிறது. ஆமாங்க, தாரில் Earth Edition எனும் வேரியன்ட்டைக் களமிறங்கி இருக்கிறது மஹிந்திரா. 

பொதுவாக – கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க, ஏதாவதொரு எடிஷன்களைக் களமிறக்கிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் டாடாவில் Dark Edition, Kaziranga என்று கொண்டு வருவார்கள். மஹிந்திராவும் அதன்படி தனது தார் ஜீப்பில் Earth எனும் எடிஷனைக் கொண்டு வந்திருக்கிறது. 

Earth வேரியன்ட்டில் என்ன புதுசுனு பார்க்கலாம்!

இந்த Earth எடிஷன், தாரின் பெட்ரோல், டீசல் என இரண்டு பவர்ட்ரெயின்களிலும் வந்திருக்கிறது. தார் ஜீப்பின் LX Hard Top எனும் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டுதான் Earth வந்திருக்கிறது. இதை LX ட்ரிம்மைவிட எக்ஸ் ஷோரூமில் சுமார் 40,000 ரூபாய் அதிகமான விலையில் இறக்கியிருக்கிறார்கள். இதன் ரேஞ்ச் சுமார் 15.4 லட்சத்திலிருந்து 17.6 லட்சம் வரை நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படியென்றால், ஆன்ரோடு விலை சுமார் 17 லட்சம் முதல் 19.5 லட்சம் வரை வரலாம். இவை எதுவுமே 2வீல் டிரைவ் மாடல்களில் இல்லை என்பதைக் கவனிக்க! மொத்தம் 4 வேரியன்ட்கள் – அனைத்துமே 4WD மாடல்கள்தான். ஆனால், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு மாடல்களிலுமே வந்திருக்கிறது தார். 

Mahindra Thar Earth

மேனுவல் பெட்ரோல் (15.4 லட்சம்), ஆட்டோமேட்டிக் பெட்ரோல் (16.99 லட்சம்), டீசல் மேனுவல் (16.15 லட்சம்), டீசல் ஆட்டோமேட்டிக் (17.6 லட்சம்) என வந்திருக்கிறது தார் எர்த் எடிஷன். 

டிசைனில் மாற்றங்கள் இருக்காது; ஆனால் இதன் கலர் பெயின்ட் ஷேடே வித்தியாசமாக இருக்கிறது. பாலைவனத்தை இன்ஸ்பயர் செய்து இதன் கலரை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா டிசைன் டீம். மேட் பெயின்ட் ஃபினிஷில், ஒரு மாதிரி பாலைவனக் கலரில் இருக்கும் இதை Desert Fury என்று அழைக்கிறது மஹிந்திரா. இதன் B பில்லர்களிலும், பின் பக்க ஃபெண்டர்களிலும் Earth எனும் பேட்ஜ்கள் இருக்கும்.

மற்றபடி உள்ளேவெல்லாம் கலர் ஸ்கீம், சாதா தாரில் இருப்பவைதான். பீஜ் மற்றும் பிளாக் ஃபினிஷில் டூயல் டோனில் லெதர் சீட்கள் செம ரிச்சாக இருக்கும். பாலைவனக் கலர் தொடர வேண்டும் என்பதற்காக, சீட்களின் ஹெட்ரெஸ்ட்களில் பாலைவன மணல் போல டிசைன் இருப்பது செம! ஸ்டீயரிங் வீலில் மஹிந்திரா லோகோ, டார்க் க்ரோம் ஃபினிஷில் இருக்கும். கப் ஹோல்டர், கியர் நாப், கியர் கன்சோல் என சில இடங்களிலும் இதைப் பார்க்கலாம்.

Thar Earth Leather Seats

இன்னொரு விஷயம் – இந்த ஒவ்வொரு Earth எடிஷனுக்கும் நம்பர் வரிசை கொடுத்து அடையாளம் வைக்கப் போகிறதாம் மஹிந்திரா. ரெஸார்ட்களில், ரூம்களில் நம்பர் கொடுப்பார்களே அதுபோல்… 1 என ஆரம்பித்து நம்பர் பிளேட் கொடுக்கப் போகிறார்கள். Identication Plate என்று இதைச் சொல்கிறது மஹிந்திரா. உதாரணத்துக்கு, நீங்கள் 10-ம் நம்பர் வாங்கினால், Earth எடிஷனில் 10-வது காரை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்! லிமிட்டெட் எடிஷன் மாடலாக இது வருமா என்பதை மஹிந்திரா சொல்லவில்லை. ஒருவேளை – எத்தனை எர்த் தார்கள் விற்றிருக்கின்றன என்பதற்காக இந்த ஐடென்ட்டிஃபிகேஷன் ப்ளேட் இருக்குமோ!

Thar Earth Interior

வழக்கம்போல் இன்ஜினைப் பொருத்தவரை அதேதான்! 2.0லிட்டர் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல். இரண்டுமே 4வீல் டிரைவ்தான். பெட்ரோல் என்றால் பவர் 152bhp, 300Nm. இதுவே டீசல் என்றால் 132bhp, டார்க் 300Nm. டார்க்கைப் பொருத்தவரை இரண்டுமே ஒரே அளவுதான் என்பதால், பிக்-அப்பில் பெட்ரோலும் டீசலும் ஒரே மாதிரியாக இருக்கலாம்.

6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் என எதில் வேண்டுமானாலும் இந்த Earth தாரை வாங்கிக் கொள்ளலாம். பாலைவன இன்ஸ்பிரேஷன், 4WD, சூப்பர் கிரவுண்ட் கிளியரன்ஸ் என ஆஃப்ரோடு சமாச்சாரங்கள் அதிகம் என்பதால், நிச்சயம் இது பாலைவனம் மாதிரியான டெரெய்ன்களில் நன்றாகவே ஓடும் என்று எதிர்பார்க்கலாம். இதன் டீஸரைக்கூட பாலைவன டிரைவாகத்தான் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா.

Mahindra Thar Earth

4WD தார்களின் விற்பனை சமீபமாகக் குறைந்திருப்பதால், ஒருவேளை இந்த Earth தாரை 4வீல் டிரைவ்களில் மட்டும் ரிலீஸ் செய்திருக்கலாம் மஹிந்திரா என்று நினைக்கிறேன். அதுக்கு நீங்க வெயிட்டிங் பீரியடைக் குறைங்க மஹிந்திரா! சேல்ஸ் சார்ட்டில் தாரும் ஏறும்! (இன்னொரு ஸ்கூப் நியூஸ்: 2024 மத்தியில் 5 டோர் தாரும் வரப் போகுது!)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.