கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது 2022 ஜனவரியில், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஹிஜாப் விவகாரம் பெரியளவில் வெடித்தது. தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளும் ஹிஜாபுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. பின்னர், பள்ளி கல்லூரிகளில் ஒரே மாதிரியான சீருடைகள்தான் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய பா.ஜ.க அரசு, பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதித்தது.

Hijab – ஹிஜாப் விவகாரம்

கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசின் தடை உத்தரவை உறுதிசெய்தது. இருப்பினும், இத்தகைய உத்தரவு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தி, 2023, மே மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியின் ஒருபகுதியாகவும் அமைந்தது. பின்னர், தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்த காங்கிரஸ், கடந்த அக்டோபரில் போட்டித் தேர்வுகளின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தது.

அதைத்தொடர்ந்து, ஹிஜாப் மீதான தடையை மாநில அரசு திரும்பப்பெறுவதாக முதல்வர் சித்தராமையா டிசம்பரில் அறிவித்தார். இந்த நிலையில், ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹிஜாப் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கிழக்கே மணிப்பூரிலிருந்து மேற்கே மகாராஷ்டிரா வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தில் தற்போது யாத்திரை மேற்கொண்டுவருகிறார்.

ராகுல் காந்தி

இந்த யாத்திரையின் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு மாணவி ஒருவர் ஹிஜாப் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு, “ஒரு பெண் என்ன அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் என்ன அணிகிறீர்கள் என்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே, என்ன அணிய வேண்டும் என்பது உங்களின் முடிவு. மாறாக, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.