எங்கே சென்றாலும், எதற்கு விண்ணப்பித்தாலும் ஆதார் அட்டை கேட்கிறார்கள் என்று பார்த்தால், சமீப காலமாக ‘நீல ஆதார் அட்டை (Blue Aadhar Card)’ என்ற வார்த்தை திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்து வருகிறது. ‘அது என்னடா ப்ளூ அதார் கார்டு… இது நம்மகிட்ட இல்லையே’ என்று பதற்றப்பட வேண்டாம்… இது குழந்தைகளுக்கான ஆதார் அட்டை ஆகும்.

Blue Aadhar Card: குழந்தைகளுக்கான ஆதார் அட்டை…

பெயரைப் போலவே…

இந்த ப்ளூ ஆதார் அட்டை ‘பால் ஆதார் அட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டை இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டதாகும். பெயரில் குறிப்பிடப்பட்டதுப்போல இந்த ஆதார் அட்டை வெள்ளை நிறத்தில் அல்லாமல் நீல நிறத்தில் இருக்கும்.

எதுவும் தேவையில்லை!

பொதுவாக ஒருவர் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும்போது கைவிரல் ரேகைகள், கருவிழி ஆகியவை பதியப்படும். ஆனால் குழந்தைகளுக்கான நீல ஆதார் அட்டையில் இது எதுவும் தேவையில்லை.

இந்த ஆதார் அட்டையில் குழந்தையின் விலாசம் மற்றும் குழந்தையின் பெற்றோர் (அம்மா/அப்பா) ஆதார் எண்ணுடம் இணைந்த குழந்தையின் புகைப்படம் வைத்து UID எண்(Unique Identification Number) வழங்கப்படும்.

Blue Aadhar Card: பள்ளி சேர்க்கை…

ஏன் முக்கியம்?

  • பள்ளி சேர்க்கை, தடுப்பூசி, பயணங்கள் போன்றவற்றிற்கு நீல ஆதார் அட்டை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  • குழந்தைகளுக்கான அரசு நல திட்டங்களுக்கு இந்த ஆதார் அட்டை தேவைப்படலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • உங்கள் அருகில் இருக்கும் ஆதார் மையத்தில் பிறப்பு சான்றிதழ், தடுப்பூசி அட்டை போன்ற குழந்தையின் பிறப்பு தேதி இருக்கும் சான்றிதழ், பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை, குழந்தையின் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

  • அடுத்தத்தாக, மையத்தில் தரப்படும் விண்ணப்பித்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • அங்கே மையத்தில் குழந்தையை புகைப்படம் எடுப்பார்கள்.

Blue Aadhar Card: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
  • பின்னர் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • இதன்பின்னர், விண்ணப்பித்தற்கான acknowledgement ஸ்லிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.

  • இந்த ஆதார் அட்டை விண்ணப்பித்த 60 நாட்களில் கையில் கிடைத்துவிடும்.

கவனிக்க வேண்டியவை…

  • ப்ளூ ஆதார் அட்டை முழுக்க முழுக்க இலவசம்.

  • இந்த ஆதார் அட்டை குழந்தையின் 5 வயது வரை மட்டுமே செல்லுப்படியாகும்.

  • குழந்தைக்கு 5 வயது ஆனதும், ஆதார் அட்டையில் கைவிரல் ரேகைகள், கருவிழி, அப்போதைய புகைப்படத்தை அப்டேட் செய்ய வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.