மூன்றுமுறை விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, எம்.பி சீட் கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் பேசியிருக்கிறார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியிலிருந்த விஜயதரணி, பா.ஜ.க-வில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“நான் பா.ஜ.க-வில் இணைந்து, இதில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணி

நான் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியின் தொடர்பிலிருந்தவள். தற்போதுவரை நான் எந்தக் கட்சிக்கும் மாறியதில்லை. இதுதான் முதல்முறையாகக் கட்சி மாறியிருக்கிறேன். தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான செயல்பாடுகள், திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் என்னை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டேன். மேலும், பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச அளவில் இந்தியா மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையின் மூலம் கட்சியைச் சிறப்பாக வளர்த்து வருகிறார்.

பா.ஜ.க-வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன் இணைந்து பா.ஜ.க-வை வளப்படுத்துவோம். பிரதமர் மோடியின் தலைமை இந்திய நாட்டுக்கு முக்கியமானது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு பெண்கள் வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் இருக்கிறது. மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தேன். சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அது மறுக்கப்பட்டது. தற்போது கூட சட்டமன்றத் தலைவராக என்னை விட ஜூனியருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க-வில் இணைந்த விஜயதரணி

இது போன்ற அதிருப்தி நீண்டகாலமாகவே இருந்திருக்கிறது. 1999 முதல் எம்.பி தேர்தலில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சென்ற தேர்தலில் எம்.எல்.ஏ – எம்.பி தேர்தல் சேர்ந்து வந்தபோதுகூட அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் பல்வேறு பணிகள் அப்படியே இருக்கிறது. அதை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளவே இல்லை. என்னைப் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராகுவது என்னை இணைத்துக்கொண்ட கட்சி எடுக்க வேண்டிய முடிவு. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.