Stock Market: கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தை நல்ல வேகத்தில் வளர்ந்து வருகிறது. 2023-ம் ஆண்டில் மட்டும் நிஃப்டி 20 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த 10 ஆண்டுகளும் இந்தியப் பங்குச் சந்தைக்கு சிறப்பானதாக இருக்கும் என சர்வதேச பங்குத் தரகு நிறுவனமான ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. மேலும், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் என்பது ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் கணிப்பு.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித வேகத்தில் வளர்ச்சி அடைந்து 3.6 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதனால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் 8-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம்

இந்த நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் எனவும், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி உலகின் 3-ம் மிகப் பெரிய பொருளாதார நாடாக வளரும் எனவும் ஜெஃப்ரீஸ் கூறுகிறது.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தற்போது இந்திய பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.5 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதன்படி, உலகிலேயே 5-ம் மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா இருக்கிறது.

ஆனால், சர்வதேசக் குறியீடுகளில் இந்தியாவின் வெய்ட்டேஜ் வெறும் 1.6 சதவிகிதமாக இருக்கிறது. இந்த அடிப்படையில் இந்திய சந்தை 10-ம் இடத்தில்தான் இருக்கிறது.

ஆனால், காலப்போக்கில் இந்த நிலை மாறிவிடும். கடந்த 15-20 ஆண்டுகளில் கிடைத்த அதே பங்குச் சந்தை வளர்ச்சி நீடித்து, புதிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டால், 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடி டாலராக உயர்ந்துவிடும் என ஜெஃப்ரீஸ் மதிப்பிட்டுள்ளது. உலக முதலீட்டாளர்களால் இந்தியப் பங்குச் சந்தையை தவிர்க்கவே முடியாது எனவும் ஜெஃப்ரீஸ் கூறுகிறது.

பங்குச் சந்தை…

சிறு முதலீட்டாளர்கள் உள்பட உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குச் சந்தையில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியர்கள் பாரம்பரியமாக பணத்தை சேமித்து வந்தவர்கள். ஆனால், இந்தியர்கள் இப்போது சேமிப்புக்குப் பதிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டதாக ஜெஃப்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் இன்னும் பல்வேறு யுனிகார்க் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கின்றன. இந்த நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டால், 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடி டாலரை தாண்டிவிடும் என்பது ஜெஃப்ரிஸ் நிறுவனத்தின் மதிப்பீடு.

மற்ற முன்னணி சந்தைகளை பொறுத்தவரை, அமெரிக்க பங்குச் சந்தையின் மதிப்பு 44.7 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. அடுத்தபடியாக சீனா (9.8 லட்சம் கோடி டாலர்), ஜப்பான் (6 லட்சம் கோடி டாலர்), ஹாங் காங் (4.8 லட்சம் கோடி டாலர்) ஆகிய சந்தைகள் இருக்கின்றன.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

General Disclaimer and Terms & Conditions of the research report

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

முதலீடு செய்வதற்குமுன், செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசிக்க முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.