புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு எதிரான சமூக ஒருதலைச்சார்புகளை எதிர்கொள்ள ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற திட்டத்தை தொடங்குகிறது அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம்.

சமூகத்திற்குள் சமத்துவம் மற்றும் புரிந்துணர்வு கலாச்சாரத்தை உருவாக்குவதே சிந்தனையைத் தூண்டும் இந்த பரப்புரைத் திட்டத்தின் நோக்கம்.

புற்றுநோய்க்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வாக, ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குவது) என்ற புரட்சிகரமான பரப்புரைத் திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது. புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவிலிருந்து வெளிக்கொணர்வது, அது தொடர்பான கட்டுகதைகளையும், தவறானக் கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வை வளர்ப்பது என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

புற்றுநோய் தினம் விரைவில் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், புற்றுநோயை வென்று உயிர்வாழ்பவர்கள் எதிர்கொள்கிற பாகுபாடு, உதாசீனம் போன்ற துரதிர்ஷ்டமான யதார்த்த நிலையை நேருக்குநேராக எதிர்கொள்ள ACC எடுக்கும் ஒரு தைரியமான நடவடிக்கை இது.

‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது, சிறப்பான திறன்களும், தகுதிகளும் இருக்கின்றபோதிலும் அவர்களது முந்தைய புற்றுநோய் வரலாற்றின் காரணமாக நிலவும் ஒருதலைச்சார்பான கண்ணோட்டங்களின் விளைவான சமூக பாகுபாடுகள் / உதாசீனங்களை எதிர்கொள்கிற, புற்றுநோயை வென்று வாழ்பவர்களின் பயணமாகும்.

பாகுபாட்டையும், உதாசீனத்தையும் எதிர்கொள்ள வேண்டிய அச்சத்தின் காரணமாக தங்களது வாழ்க்கையில் புற்றுநோய் வந்த முக்கியமான அம்சத்தை அவர்கள் மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து இந்த பரப்புரைத் திட்டம் எடுத்துரைக்கிறது. எண்ணற்ற நபர்கள் இதன் காரணமாக எதிர்கொள்ளும் துயரமான அனுபவங்களை இதன் மூலம் உரத்த குரலில் இது எடுத்துரைக்கிறது.

‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இத்திட்டம் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும், தருணங்களிலும் பாகுபாட்டின் ஆழமான விளைவுகளை ஆராய்கிற மற்றும் சிந்தனையை தூண்டுகிற ஒரு சமூக பரிசோதனை வீடியோவை மக்களின் பார்வைக்கு வைக்கிறது. இதில் வேறுபட்ட பல பின்புலங்களைச் சேர்ந்த நபர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். சமூக ரீதியிலான, நிறுவன ரீதியிலான மற்றும் தோற்றம் தொடர்பான பல ஒருதலைச்சார்பு கண்ணோட்டங்கள் இந்த காணொளியில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அப்போலோ கேன்சர் சென்டர்

தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தாங்கள் பெற்ற ஆதரவின் காரணமாக தாங்கள் யாரென்று உலகிற்கு தைரியமாக அறிவிக்கின்ற மற்றும் தங்களது கடந்தகால புற்றுநோய் பாதிப்பு குறித்து பேசுகிற சில தைரியமான வெற்றியாளர்கள் இந்த காணொளியின் இறுதியில் இடம்பெறுகின்றனர்.

கார்ப்பரேட் உலகம் உட்பட சமூகத்திற்குள் விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அதில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஊக்குவிக்கவும் ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இந்த முன்னெடுப்புத் திட்டத்தை கார்ப்பரேட் / பெருநிறுவன துறைக்கும் மற்றும் பொது சமூகத்தின் பார்வைக்கும் ACC எடுத்துச்செல்கிறது. கூடுதலாக புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்கள் முக்கிய பங்கேற்கும் புற்றுநோய் பற்றிய உணர்வூட்டல் அமர்வும் நடைபெறவிருக்கிறது. புற்றுநோய் பற்றி புரிந்துகொள்ளவும், அது குறித்த தவறான அவப்பெயரை உடைத்தெறியவும் மற்றும் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வையும் பேணி வளர்க்கவும் இந்த அமர்வு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும்.

வாழ்க்கையிலும் மற்றும் சமூகத்திற்குள்ளும் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை யதார்த்த திறன்களை பங்கேற்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் வழங்கி அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த அமர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வடிவங்களிலும் கிடைக்கும். மக்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் சமத்துவத்தினை உருவாக்குவதற்கு இந்த பரப்புரைத் திட்டமும், உரையாடல் அமர்வும் நிச்சயம் உதவும்.

சமத்துவம் மற்றும் நடுநிலையோடு நடத்தப்படுவதற்கான உரிமையும், சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்திய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்கான இயக்குநர் திரு. ஹர்ஷத் ரெட்டி, ஷஷஉலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவது என்ற நோக்கத்தையும் கடந்து எமது குறிக்கோளும், செயல்திட்டங்களும் நீள்கின்றன. அவர்களது மருத்துவ வரலாறு எதுவாக இருப்பினும் ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளையும் மதிக்கும் நாங்கள் புற்றுநோயாளிகளுக்கும் அவைகள் நிச்சயம் கிடைக்க வேண்டுமென்று உறுதியாக நம்புகிறோம். ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இத்திட்டம் சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்கிற மற்றும் அவர்களை கரம் பிடித்து உயர்த்துகிற ஒரு சமூகத்தை உருவாக்கும் செயற்பணியில் எமது அர்ப்பணிப்புக்கான ஒரு சாட்சியமாக திகழ்கிறது.” என்று கூறினார்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

லிதின் குமார் என்ற சிறுவனின் அன்னையான திருமதி. நவீனா காசி கூறியதாவது: “பாகுபாடு காட்டப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக எனது மகனின் கடந்தகால புற்றுநோய் வரலாற்றை மறைத்த பெரும் சுமையை நாங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறோம். ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்பது எங்களது நிஜ வாழ்க்கை கதையை எனது மகனும் எங்களது குடும்பமும் பிறரோடு பகிர்ந்து கொள்ள உதவியிருக்கிறது. எங்களைப்போல மற்றவர்களும் அவர்களை புற்றுநோய் தொடர்பான வாழ்க்கை கதையை தைரியமாக வெளிப்படுத்த முன்வருவதற்கு ஊக்கமளித்திருக்கிறது. புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்பவர்களின் மனஉறுதி மற்றும் பாதிப்பிலிருந்து மீளும் திறனை இந்த சமூகமும், உலகமும் உணரவும் அங்கீகரிக்கவும் இதுவே தருணம்.”

சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரின் மார்பகம், தலை மற்றும் கழுத்து பிரிவின் இயக்குநர் டாக்டர். சப்னா நாங்கியா, இந்த பரப்புரைத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியதாவது, “புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகுபாடும், உதாசீனமும் அவர்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை உருவாக்குவது நின்றுவிடுவதில்லைளூ அவர்களது மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்பை இது ஏற்படுத்துகிறது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்

இந்த முக்கியமான பிரச்சனை மீது சமூகத்திற்கு எடுத்துக்கூறி உணர்வூட்டுவதற்கான ஒரு முதன்முறை முயற்சியாகவும் அணுகுமுறையாகவும் அன்மாஸ்க் கேன்சர்) திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. புரிந்துணர்வும், கனிவும் நிறைந்த, சமத்துவம் நிலவும் ஒரு உலகிற்கு இது பாதை அமைத்துத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர்ஸின் குழந்தைகளுக்கான இரத்தவியல் புற்றுநோயியல் துறையின் நிபுணர் டாக்டர். ரம்யா உப்புலுரிரி இது தொடர்பாக பேசுகையில், “எமது இப்பரப்புரை திட்டம் இக்காலக்கட்டத்திற்கு அவசியமாகவும், உடனடியாகவும் தேவைப்படுகிறது. ஆன்மா கேன்சர் என்பது, வெறுமனே ஒரு தனித்துவமான முன்னெடுப்பு மட்டுமல்ல; அனைவருக்கும், அதுவும் குறிப்பாக புற்றுநோய் மீது வெற்றிகண்டு உயிர்வாழும் நபர்களுக்கு, சமத்துவத்தையும், நடுநிலையோடு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமையையும் செயல்படுத்தும் ஒரு உலகை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என்பதற்கான ஒரு பொறுப்புறுதியாகவும் இது இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகும், சிறப்பான வாழ்க்கையை உறுதிசெய்ய வேண்டுமென்ற ACC -ன் பொறுப்புறுதிக்கு ஒரு வலுவான சான்றாக இந்த முன்னெடுப்புத் திட்டம் இருக்கிறது. ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது, மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு விவாதத்தை இது நிச்சயம் தொடங்கி வைக்கும். தங்கள் கடந்தகால வரலாற்றை மறைக்காமல், வெளிப்படையாக புற்றுநோய் நோயாளிகள் பேசவும், கண்ணியத்தோடும், சமத்துவத்தோடும் வாழக்கூடிய ஒரு புதிய உலகிற்கு இது வழிவகுக்கும் என்று நம்பலாம்.

https://www.apollohospitals.com/cancer-treatment-centres/unmask-cancer இல் உள்நுழைவதன் மூலம் புற்றுநோய் உணர்திறன் அமர்வில் பங்கேற்பதன் மூலம் #UnmaskCancerக்கான உறுதிமொழியை எடுத்து இந்த காரணத்தை ஆதரிக்க புற்றுநோய் வெற்றியாளர்களை அப்பல்லோ புற்றுநோய் மையங்கள் அழைக்கின்றன.

#புற்றுநோயை வெல்வோம்

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து- https://apollocancercentres.com/

புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது. 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 325- க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேச தரத்தில் சிகிச்சை விளைவுகளைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இயங்கும் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் தெரபி சென்டர் என்பதைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தை வலுவாக மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வசதிகளையும், திறன்களையும் பெற்றிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.