காதலையும், காதலர்களையும் கொண்டாட காதலர் தினம் இருக்கிறது. ‘காதலை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா என்ன? நம்முடன் அன்பாக, நமது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்தான்’ என்று சொல்லி, வேலன்டைன்ஸ் டேக்கு போட்டியாக `கேலன்டைன்ஸ் டே’ (Galentine’s Day) என்ற தினம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்து வருகிறது.

love

`Parks and Recreation’ என்ற காமெடி நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரமான லெஸ்லி நோப் என்பவரால் கேலன்டைன்ஸ் டே பிரபலப்படுத்தப்பட்டது.

அதென்ன `கேலன்டைன்ஸ் டே’..? காதலர் தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13 அன்று கேலன்டைன்ஸ் டே கொண்டாடப்படுகிறது. ஹைலைட் என்னவென்றால்… இந்த அன்பும் பாசமும் பகிர்தலும் முற்றிலும் பெண்களுக்கானது. `ஒன்லி கேர்ள்ஸ்’ என மாஸாக, கேங்காக சுற்றித் திரியும் தோழிகள் தங்களின் சக தோழிகளைக் கொண்டாடும் நாள் இது.  

குறிப்பாக, `பெண்கள் பெண்களை அங்கீகரிக்கும் நாள்’. இந்த நாளில் அம்மா, தங்கை, தோழி என உங்களோடு கைகோத்துப் பயணித்தவர்களுக்கு அன்புக் கடிதம் ஒன்றை எழுதலாம். அவர்களோடு வெளியே உணவருந்தச் செல்லலாம். பிடித்த பொருள்களைப் பரிசாகக் கொடுக்கலாம்.

படத்துக்குப் போகலாம். இப்படி அவர்களுக்கு பிடித்தவற்றைச் செய்வதோடு, `பெஸ்ட் ஃபிரெண்ட்’ என அங்கீகாரமும் கொடுத்துக் கொள்ளலாம்.  

நட்பு இருக்கு, மத்ததெல்லாம் எதுக்குனு சொல்லி, உங்களோட தோழிக்கு கமென்டில் வாழ்த்துத் தெரிவிக்கலாம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.