ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கும் ‘பிரம்மயுகம் (Bramayugam)’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில், மம்மூட்டியின் பெயர் ‘குஞ்சமன் போட்டி’ என்று குறிப்பிடப்பட்டு, அப்பெயரிலேயே படத்திற்கான பின்னணி இசை ஒன்றும் யூடியூப்பில் வெளியாகியிருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘குஞ்சமன் போட்டி’ என்ற மாந்திரீகரின் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரம்மயுகம் | மம்மூட்டி

இந்நிலையில், கேரளா மாநிலம் கோட்டயத்தின் நம்பூதிரி சமூகத்தைச் சேர்ந்த குஞ்சமன் போட்டியின் ‘புஞ்சமன் இல்லம்’ என்ற குடும்பம், “‘குஞ்சமன் போட்டி’ பெயரில் மம்மூட்டி நடித்திருக்கும் கதாபாத்திரமானது பில்லி, சூனியம் போன்ற தீயவழியிலான மாந்திரீக செயல்களைச் செய்வதாகக் காட்டப்படுகிறது. இது எங்களின் மூதாதையரான குஞ்சமன் போட்டி மீதும், அவரின் வழித்தோன்றல்களான எங்கள் குடும்பத்தின் மீதும் மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால், இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழைத் திரும்ப பெற வேண்டும்” என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

படக்குழு சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இப்படத்தின் கதையானது ‘கொட்டாரத்தில் சங்குண்ணி’ எழுதிய ‘ஐதீகமாலா’ எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இன்று (பிப்ரவரி 14), இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘குஞ்சமன் போட்டி’ என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று படக்குழுவிற்கு உத்தரவிட்டிருக்கிறது.

Potti Theme

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டயத்தில் வாழ்ந்த எழுத்தாளரான கொட்டாரத்தில் சங்குண்ணி, கேரள மக்களின் வாய்வழி கதைகளிலும், மத நம்பிக்கைகளிலும் உள்ள மர்மமான கதைகளை நாட்டுப்புறக் கதைகளாக ‘ஐதீகமாலா’ என்ற தொகுப்பாக எழுதினார். அதில், குஞ்சமன் போட்டியின் கதைகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர், இதே தொகுப்பில் உள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்கிற கொள்ளையனின் சாகசங்களும் மர்மங்களும் நிறைந்த கதையும் அக்கொள்ளையனின் பெயரிலேயே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘பிரம்மயுகம் (Bramayugam)’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதில் இடம்பெற்றிருக்கும் ‘குஞ்சமன் போட்டி தீம்’ இசையானது ‘கொடுமோன் போட்டி (Kodumon Potty) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மம்மூட்டியின் பெயரும் மாறியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.