தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்து விட்டார். அதற்காக அவர் பேசிய விஷயங்கள் பின்னர் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அப்பாவு – ஆளுநர் ரவி – தமிழ்நாடு சட்டமன்றம்

அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,“ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். மாறாக, தவறான அறிக்கைகள், அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதாக இருக்கக் கூடாது.

ஆனால், ஆளுநரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது. அவையில் இன்று வழங்கப்பட்ட அந்த உரை தவறான கூற்றுக்களுடன் பல பத்திகளைக் கொண்டிருப்பதால் அதை ஆளுநர் வாசிக்க முடியாது. அதை வாசித்தால், அது அரசியல் சாசன கேலிக்கூத்தாக இருக்கும். மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.

விகடன் கருத்துக் கணிப்பு

மேலும், சபாநாயகர் ஆளுநரை `கோட்சே வழிவந்தவர்’ எனக் கூறி, தனது அநாகரிகமான செயலால் அவையின் மாண்பைக் குறைத்தார். அதனால், ஆளுநர் தன்னுடைய பதவி மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு அவையிலிருந்து வெளியேறினார்” என விளக்கமளித்திருக்கிறது.

இந்த நிலையில், நமது விகடன் இணையதளப் பக்கத்தில், “தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்திருப்பது” குறித்துக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், “ஆளுநரின் அரசியல் – ஆளுநரின் விருப்பம் – மரபு மீறல்” – என்ற மூன்று விருப்பத் தேர்வுகளையும் வழங்கியிருந்தோம்.

விகடன் கருத்துக் கணிப்பு முடிவுகள்

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்திருப்பது, ஆளுநரின் அரசியல் என 47 சதவிகித வாசகர்களும், ஆளுநரின் விருப்பம் என 22 சதவிகித வாசகர்களும், மரபு மீறல் என 31 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது Vikatan.com பக்கத்தில், `கோட்சே, சாவர்க்கர் பெயர்களை குறிப்பிட்டு சபாநாயகர் அவையில் பேசியது?’ குறித்த கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அதில் உங்கள் மேலான கருத்துகளை பதிவிடலாம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.