Traffic

` 2023 -ம் ஆண்டில் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டாப் 10 நகரங்கள்’ பட்டியலை `டாம் டாம் டிராஃபிக்’ வெளியிட்டுள்ளது. இதற்காக 55 நாடுகளில் உள்ள 367 நகரங்களின் போக்குவரத்து நேரம் ஒப்பிடப்பட்டது.

பெங்களூரு

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து பெங்களூரு மற்றும் புனே நகரங்கள் மட்டும் இடம் பிடித்துள்ளன. 

travel

2023ம் ஆண்டு இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பெங்களூரு தற்போது 6-வது இடத்திற்கு வந்து, முன்னேற்றம் கண்டுள்ளது. பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்கச் சராசரியாக 28 நிமிடம்10 வினாடிகள் ஆகிறது. 

டெல்லி

இந்த பட்டியலில் புனே 7-வது இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 44 -வது நெரிசலான நகரமாக உள்ளது. இங்கு 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 21 நிமிடங்கள் 40 வினாடிகள் ஆகிறது.

மும்பை

மும்பை 54-வது இடத்தில் உள்ளது. இங்கு 10 கி.மீ தூரத்தை கடக்க 21 நிமிடங்கள் 20 வினாடிகள் எடுக்கிறது. 

லண்டன்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ச்சியாக லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 10 கி.மீ தூரத்தை கடக்க 37 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகிறது.

டொரண்டோ

டப்ளின், டொரண்டோ, மிலன், லிமா ஆகிய நகரங்கள் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளன.

புனே

பெங்களூரு, புனே, புக்கரெஸ்ட், மணிலா, பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்கள் தொடர்ச்சியாக ஆறு முதல் பத்து வரையிலான இடத்தை பிடித்துள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.