வரும் 17.2.24 சனிக் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மேல் ஶ்ரீமகாவித்யா ஶ்ரீசக்ரஹோமம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டால் ஸ்ரீயோக மாயாதேவியின் ரட்சை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்!

ஆதிபராசக்தி

ஜகன்மாதாவான ஸ்ரீஆதிபராசக்தி உலக உயிர்கள் இன்புற்று வாழத் தன்னுடைய திருநாமங்களில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஸ்ரீவாக் தேவியரான ஜயினீ, காமேஸ்வரி, மோதினீ, சர்வேஸ்வரி, வஸீனி, விமலா, அருணா, கௌலினீ ஆகியோர் அம்பிகையின் 1000 திருநாமங்களைப் பாடி ஸ்ரீலலிதா சகஸ்ரநாம துதிப்பாடலை வெளியிட்டனர். இது ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியர் வழியே பூவுலகில் பரவியது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

64 கோடி யோகினிகளால் போற்றப்படும் ஸ்ரீலலிதாம்பிகை, ஸ்ரீயோக மாயா என்றும் போற்றப்படுகிறாள். லலிதா சஹஸ்ரநாமம் ‘மஹா சதுஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா’ என்றும் குறிப்பிடுகிறது. யோகினிகள் வணங்கும் ஸ்ரீயோகமாயா தேவி, தம்மை தியானிக்கும் பக்தர்களது விருப்பங்களை நிறைவேற்றுபவள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன பயத்தை விரட்டுபவள், துரதிஷ்டங்களைத் தடுப்பவள். செல்வச் செழிப்பைத் தருபவள், நல்ல வம்சத்தை வளர்ப்பவள், சுபங்களையும் கொடுக்கும் வல்லமை கொண்டவள் என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

அன்னை ஆதிபராசக்தி ஸ்ரீயோக மாயா வடிவில் குடி கொண்ட ஆலயங்கள் முன்பு யோகினி பீடங்கள் என்று இந்தியாவெங்கும் வணங்கப்பட்டன. தற்போது ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு என அறுபத்து நான்கு யோகினியருக்கான ஆலயங்கள் உள்ளன. அதேபோல வடக்கே உத்தராகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் புகழ் பெற்ற ஸ்ரீயோக மாயா தேவி ஆலயம் உள்ளது. அந்தக் கோயிலுக்கு நிகரான சாந்நித்தியத்துடனும் திகழ்கிறது, திண்டுக்கல் செம்பட்டி, ஸ்ரீயோக மாயாதேவி ஜீவமுக்தி பீட ஆலயம்.

ஶ்ரீமகாவித்யா ஶ்ரீசக்ரஹோமம்

திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான் கோட்டை கிராமம் – செம்பட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது, அன்னை ஆதி பராசக்தி ஸ்ரீயோக மாயாதேவி திருக்கோயில். இந்த தேவியே பாகவத புராணத்தில் கிருஷ்ண சகோதரி, நாராயணி, விஷ்ணு துர்கை என்றெல்லாம் போற்றப்படுகிறாள். பகவத் கீதையும் இவளைப் போற்றுகின்றது. விந்திய வாஸினி என்றும் இவளைப் புராணங்கள் தொழுகின்றன.

சர்வ மங்கலங்களும் அருளும் அம்பிகை இங்கே ஜீவ முக்தி பீடத்தில் – அபூர்வ யோக தவநிலையில் வீற்றிருக்கிறாள். இந்த அன்னையை ஒருமுறை தரிசித்தாலே, குறைகள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. சாந்நித்தியம் மிகுந்த இந்தத் தலத்தில் தேவர்களும், சித்தர்களும் போற்றும் ஸ்ரீமகா வித்யா ஸ்ரீசக்ரஹோமம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், வரும் 17.2.24 சனிக் கிழமை அன்று (மாசி-5), வளர்பிறை அஷ்டமி – கார்த்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ரஹோமம் நடைபெறவுள்ளது.

ஓயாத உடல்-மனப் பிரச்னைகள் கொண்டவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், பிரச்னைகள் நீங்கி பலன் அடைவார்கள். உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல் உண்டாகும்; சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும்; மரண பயம், எதிரிகளால் அச்சுறுத்தல், கடன் தொல்லை, எடுத்த காரியங்களில் தடைகள் போன்ற பாதிப்புகள் விலகும்.

ஶ்ரீசக்ர நாயகியான யோக மாயாதேவியின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறுவதற்கு, ஶ்ரீமகாவித்யா ஶ்ரீசக்ரஹோம வழிபாடு துணை செய்யும். சகல தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வம், மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளையும் அருளும் வல்லமை இந்த ஹோமத்துக்கு உண்டு.

திண்டுக்கல் செம்பட்டி, ஸ்ரீயோக மாயாதேவி

இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து யோகமாயாதேவியை மனமுருகி வேண்டிக் கொண்டால் காரிய ஸித்தியும் அன்னையின் கருணை கடாட்சமும் பெறலாம். வாசகர்கள் ஹோம சங்கல்பப் பிரார்த்தனைக்கு இங்குள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஹோமப் பிரசாதத்துடன் வழங்கப்படும் காப்பு ரக்ஷை, விசேஷமானது. இந்த ரக்ஷையை பக்தியோடு வணங்கி, நீங்கள் விரும்பிய வேண்டுதலை எண்ணிச் சங்கல்பம் செய்து கையில் கட்டிக்கொள்வது சிறப்பு. இதன் மூலம் நம் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தீய சக்திகள் நம்மை அண்டாது; அம்மனின் அருள் கடாட்சம் எப்போதும் நம்மைக் காத்து நிற்கும் என்பது உறுதி.

ஶ்ரீமகாவித்யா ஶ்ரீசக்ரஹோமம்

மங்கல வாழ்வும் மனையறம் விளங்கவும் உதவும் இந்த யாகத்தில் பங்கு கொள்ளுங்கள். தீர்க்க சுமங்கலியாக விளங்கவும் உங்கள் குலம் விளங்கவும், உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள அடையாளம் காண்பர் என்பது நம்பிக்கை. ஆன்மிக அன்பர்கள் இந்த சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும், அவர்கள் எல்லாவித வளங்களையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (அம்மனின் ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.