நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு கட்ட ஆலோசனையில் அ.தி.மு.க மும்மரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒருபகுதியாக பழைய ஸ்டைலில் போஸ்டர் அரசியலை கையில் எடுத்து இருக்கிறது அதிமுக. அதாவது, `கண்டா வரச் சொல்லுங்க’ என்று குறிப்பிட்டு தமிழ்நாடுக்கு முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதேபோல, அதிமுகவின் ஐ.டி விங்-கும் அந்த வாசகத்தில் ஹஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறது.

ஏன் இந்த வாசகம்… என்ன பிளானில் இப்படி ட்ரெண்ட் செய்கிறார்கள் என்று அதிமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரசார முன்னெடுப்புதான் இந்த `கண்டா வரச் சொல்லுங்க’ போஸ்டர்ஸ். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் சார்பில் 38 எம்.பிக்கள் இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்… தமிழ்நாட்டின் உரிமையை அவர்கள் எப்படி பறிகொடுத்தார்கள் என்பது உள்ளிட்ட மொத்த தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளோம். அதன்படி, எம்.பி.க்களின் செயலற்ற தன்மையை அந்ததெந்த மாவட்ட கழக நிர்வாகிகள் பேசுவார்கள்.

சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

சமூக வலைத்தளங்களை தாண்டி, மக்களை நேரடியாக அணுக போஸ்டர்ஸ் அரசியல் ரொம்பவே முக்கியம். அதன்படிதான், தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தொடங்கத்திலேயே இந்த நல்ல பயன் கொடுத்து இருக்கிறது. இதை தொடர்ந்து செயல்படுத்தவுள்ளோம். அதேபோல, தமிழ்நாடு முதல்வர் இல்லாமல் ஒரு வாரக்காலமாக இருக்கிறது. முதல்வர் இருந்த இடத்தில் தற்போது உதயநிதி அரசு கட்டடங்களை திறந்து வருகிறார். அதுமட்டுமல்லால் இந்த ஒருவாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை இன்னும் மோசமாகி விட்டது. இதுகுறித்தும் மக்களிடம் பேசவிருக்கிறோம்.” என்றனர் விரிவாக.

சமூக வலைத்தள அரசியலை தாண்டி, மக்களை எளிமையாக அணுகக்கூடிய வகையில் போஸ்டர் அரசியலை அதிமுக கையில் எடுத்துள்ளது. அது எந்தளவுக்கு பயனை கொடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரம் திமுக-வும் இந்த கண்டா வரச் சொல்லுங்க என்னும் ட்ரெண்டை கையில் எடுத்து அதிமுகவை டார்கெட் செய்ய தொடங்கியுள்ளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.