`கந்து வட்டியை கூட சமாளித்து விடலாம், ஆனால் கிரெடிட் கார்டு வட்டியை சமாளிக்க முடியாது’ என கிரெடிட் கார்டு வாங்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. மற்றொருபுறம் திடீர் தேவை, அவசர தேவை என்பதற்கெல்லாம் கிரெடிட் கார்டின் உதவி தேவைப்படும் என அதைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. 

கிரெடிட் கார்டு

வாடிக்கையாளருடைய சம்பளம் மற்றும் தேவையின் அடிப்படையில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபர்கள் கார்டுகளை பயன்படுத்தி விட்டு, குறிப்பிட்ட தேதிக்குள் அந்த தொகையைச் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும்பட்சத்தில் அதற்கேற்ப வட்டியும் வசூலிக்கப்படும்.

இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி 2 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கிய முதல் வங்கி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

ஹெச்டிஎஃப்சி நிறுவனம் 2001-ல் இருந்து கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. 2017-ல் 1 கோடி கிரெடிட் கார்டுகள் வழங்கி சாதனை படைத்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில் அடுத்த 1 கோடி கிரெட்டி கார்டுகளை வழங்கி இருக்கிறது. இதன்மூலம் 2 கோடி கிரெடிட் கார்டு வழங்கி கடந்த ஜனவரி 16 அன்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2 கோடி கிரெடிட் கார்டு வழங்கிய நாட்டின் முதல் கடன் வழங்குபவராக நாங்கள் மாறியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளது.  

ஹெச்டிஎஃப்சி வங்கி

ரிசர்வ் வங்கி 2023 நவம்பர் அன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் மொத்தம் 9.6 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் சுமார் 21 சதவீதம் அளவு கார்டுகள் ஹெச்டிஎஃப்சி வங்கிக்குச் சொந்தமானது.

வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்தபடியாக எஸ்பிஐயும், அதற்கு அடுத்தாக ஐசிஐசிஐயும் மற்றும் ஆக்சிஸ் வங்கியும் உள்ளன.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்படியெனில் நீங்கள் பிறருக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்த சொல்லி பரிந்துரைப்பீர்களா, கமென்டில் சொல்லுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.