கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது.  இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இதன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி சத்யராஜைப் புகழ்ந்து பேசி அவருடன் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சிங்கப்பூர் சலூன்

சத்யராஜ் குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, “சத்யராஜ்  சார் சமீப காலமாகவே தொடர்ந்து உங்களது பழைய படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   நீங்கள் நடித்த ‘தெற்கு தெரு மச்சான்’,’ அமைதிப்படை’ உள்ளிட்ட சில படங்களை இப்போதுவரைக்கும் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுடைய காமெடி சென்ஸ், ரொமான்டிக் காட்சிகள் அனைத்தையும் நான் மிகவும் ரசிப்பேன்.

பழைய நடிகர்களில் யார் பிரமாதம் என்று கேட்டால் எல்லோரும் உங்கள் பெயரை தவறாமல் சொல்வார்கள். உங்களுடன் சரிக்கு சமமாக படம் பண்ண வேண்டும் என்பதுதான் ஆசை. அந்த வாய்ப்பைக் கொடுங்கள் சார்.

விஜய் சேதுபதி, சத்யராஜ்

அதற்காகத்தான் நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். சப்போர்ட்டிங் ரோல் இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” நன்றி சார் என்று சத்யராஜ்  நெகிழும் படி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.